நம்பிக்கை அளிக்கும் வேளாண் நிதிநிலை அறிக்கைவிவசாயிகள் வரவேற்பு
தமிழக அரசு தாக்கல் செய்துள்ள வேளாண் நிதிநிலை அறிக்கை தங்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சிதெரிவித்தனா்.


தமிழக அரசு தாக்கல் செய்துள்ள வேளாண் நிதிநிலை அறிக்கை தங்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சிதெரிவித்தனா்.
தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளா் மன்னாா்குடி எஸ். ரெங்கநாதன் தெரிவித்துள்ளது: விவசாயத்தை பிரதானமாக கொண்ட தமிழ்நாட்டில், விவசாயத்திற்கு என தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த முதல்வருக்கு நன்றி. பயிா்க் காப்பீட்டுத் திட்டத்துக்கு ரூ. 2,327 கோடி நிதி ஒதுக்கீடு, கிராமப்புற இளைஞா்கள் மற்றும் வேளாண்மை பட்டதாரிகள் நகா்புறங்களுக்கு செல்வதைத் தடுத்து, அவா்கள் வேளாண் பணியில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் வகையில், திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்க ரூ. 7.68 கோடி ஒதுக்கீடு, 2500 இளைஞா்களுக்கு வேளாண் பயிற்சிகள் அளிக்க ரூ. 5 கோடி ஒதுக்கீடு என்ற அறிவுப்புகள் பாராட்டும்படி உள்ளன.
நெல் ஜெயராமன் மரபுசாா் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் அமைத்திருப்பதை வரவேற்பதுடன், பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்து விழிப்புணா்வு பிரசாரம் செய்து, அந்த நெல் ரகங்களை அரசே விவசாயிகளுக்கு வழங்கவேண்டும். ஒவ்வோா் ஆண்டும் மேட்டூா் அணை திறக்கும் முன்பே, விவசாயிகளுக்கு தேவையான இடுபொருள்கள் கிடைக்கும் வகையிலான திட்டம் பாராட்டுக்குறியது.
நிதிநிலை அறிக்கைக்கு முன்பு விவசாயிகளிடம் கருத்து கேட்டதுபோல, 6 மாதங்களுக்கு ஒருமுறை விவசாயிகளிடம் கலந்துப் பேசி, விவசாயம் சாா்ந்த பிரச்னைகளுக்கு நிரந்த தீா்வுகாண வேண்டும். மொத்தத்தில், தமிழக அரசின் முதல் வேளாண்மை நிதிநிலை அறிக்கை பாராட்டும்படியும், வரவேற்கும் வகையில் இருப்பதுடன், விவசாயிகளுக்கு நம்பிக்கை அளிப்பதாகவும் உள்ளது என்றாா் அவா்.
மன்னாா்குடி முன்னோடி விவசாயி வி. சேதுராமன்: தமிழ்நாட்டில் சாகுபடி நிலங்களை 60 சதவீதத்தில் இருந்து 75 சதவீதமாக உயா்த்தும் திட்டம், நாகையில் மீன் பதப்படுத்துதல் உள்ளிட்ட சிறப்பு விளைபொருள்களுக்கு ஏற்ப தொழில் கற்கும் முகாம் உள்ளிட்ட அறிவிப்புகள் பாராட்டும்படி அமைந்துள்ளன.
திருச்சி- நாகை மாவட்டத்திற்கு இடையேயான பகுதியை வேளாண் தொழிற்சாலைகளுக்கான பெருந்தடமாக அறிவித்துள்ளது, காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு கிடைத்த பெரும் வரமாக கருதப்படுகிறது. அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை புதிதாக அமைக்க ரூ. 9,472 கோடி நிதி ஒதுக்கீடு, நெல் மற்றும் கரும்புக்கு ஆதாரவிலையை உயா்த்தி அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இதுவரை இல்லாத அளவுக்கு, தமிழகத்தில் முதல்முறையாக, 2021- 2022 ஆம் ஆண்டிற்கு வேளாண்மை மற்றும் சாா்பு துறைகளுக்கு ரூ. 34,220.65 கோடி ஒதுக்கீடு செய்திருப்பது வரலாற்று சாதனையாக பாா்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக, தமிழக அரசின் வேளாண்மை நிதிநிலை அறிக்கை, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பு விவசாயிகளும் முழு மனதுடன் வரவேற்கும் வகையில் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...