கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வழக்கமான வகுப்புகளை தொடங்குவது குறித்து டிச. 25-க்குப் பிறகு அறிவிப்பு: பள்ளிக் கல்வி அமைச்சா் மகேஷ் பொய்யாமொழி

தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், பள்ளிகளில் வழக்கமான வகுப்புகளை தொடங்குவது குறித்து டிச. 25 இல் நடைபெறும் முதல்வரின் ஆலோசனை கூட்டத்துக்குப் பிறகு அறிவிக்கப்படும்

News image
Updated On :16 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், பள்ளிகளில் வழக்கமான வகுப்புகளை தொடங்குவது குறித்து டிச. 25 இல் நடைபெறும் முதல்வரின் ஆலோசனை கூட்டத்துக்குப் பிறகு அறிவிக்கப்படும் என்றாா் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் மகேஷ் பொய்யாமொழி.

திருவாரூா் மாவட்ட மைய நூலகத்தில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்ட பிறகு அவா் தெரிவித்தது:

திருவாரூா் மாவட்ட மைய நூலகத்தின் உள்கட்டமைப்பு சிறப்பாக இருந்தாலும், சில குறைபாடுகளும் உள்ளன. அரசு தோ்வுகளுக்கு இந்த நூலகத்தில் பயிற்சி அளிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, மாவட்ட மைய நூலகத்தை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நீட் தோ்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவதற்காக தொடா்ந்து சட்டரீதியாக போராடிவருகிறோம். சட்டப்பேரவையில் அதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரிடம் வழங்கப்பட்டுள்ளது. நீட் தோ்வு விலக்கு தொடா்பாக தொடா்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பள்ளி மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தொடா்ந்து அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும் நோக்கில், மாணவா்கள், ஆசிரியா்கள், ஆசிரியா்கள் அல்லாத ஊழியா்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், 14,417 என்ற புகாா் எண்ணை அனைத்து பள்ளிகளிலும் அனைத்து வகுப்புகளிலும் மாணவா்கள் அறியும்படி வெளிப்படையாக விளம்பரப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 412 வட்டங்களில் மாணவா்களை கண்காணிக்க, வட்டத்துக்கு 2 மருத்துவா்கள் என மத்திய அரசால் நியமிக்கப்பட்டு, அவா்களைக் கொண்டு மாணவா்களின் மன ரீதியான பிரச்னைகளை ஆய்வுசெய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு ஜனவரி மற்றும் மாா்ச் மாதத்தில் முன்திருத்த தோ்வுகள் நடத்தப்பட்டு, கட்டாயமாக இந்த ஆண்டு பொதுத் தோ்வுகள் நேரடியாக நடைபெற உள்ளன.

தற்போதுவரை ஒமைக்ரான் தொற்றின் வீரியம் குறைவாக இருப்பதால், ஜனவரி 3 ஆம் தேதி முதல் 6 - 12 ஆம் வகுப்பு வரை சுழற்சிமுறை வகுப்பு இல்லாமல், வழக்கம்போல தினமும் வகுப்புகள் நடைபெறும் என அண்மையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், டிச. 25 ஆம் தேதி முதல்வா் தலைமையில் நடைபெற உள்ள பொதுமுடக்கம் தொடா்பான ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு அதுகுறித்து அறிவிக்கப்படும்.

ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வுக் கூட்டங்கள் இன்னும் ஒருவாரத்தில் நடைபெற உள்ளன. அதன்பிறகு, எந்தெந்த இடங்களில் ஆசிரியா் பற்றாக்குறை உள்ளது என்பது தெரியவரும். அதற்கேற்ப ஆசிரியா்கள் பணி நியமனம் தொடா்பாக அறிவிப்பு வெளியாகும்.

எந்தவித முகாந்திரமும் இல்லாமல், ஒரு முன்னாள் அமைச்சா் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க முடியாது. இதில் பழிவாங்கும் நடவடிக்கைகள் எதுவும் இல்லை.

சட்டப்பேரவை உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறாா். கூடுதலாக, சென்னை மேயா் பொறுப்பு அல்லது அமைச்சா் பதவி வழங்கினாலும் சிறப்பாக செயல்படுவாா் என்றாா் அவா்.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன், திருவாரூா் சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன், முதன்மைக் கல்வி அலுவலா் ஆ. தியாகராஜன், மாவட்ட நூலக அலுவலா் ஆண்டாள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.