/

சேரன்குளத்தில் என்எஸ்எஸ் சிறப்பு முகாம்

ராஜகோபாலசுவாமி அரசுக்கல்லூரி மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகிவற்றின் நாட்டு நலப்பணித்திட்டம் இணைந்து நடத்தும் ஒரு வார கால சிறப்பு முகாம் சேரன்குளத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

ராஜகோபாலசுவாமி அரசுக்கல்லூரி மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகிவற்றின் நாட்டு நலப்பணித்திட்டம் இணைந்து நடத்தும் ஒரு வார கால சிறப்பு முகாம் சேரன்குளத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

சேரன்குளம், நான்காம் சேத்தி, நெம்மேலி, மறவக்காடு ஆகிய ஊராட்சிகளில் டிச. 17 முதல் 23 ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. முகாமின் முதல் நாள் நிகழ்ச்சியினை சேரன்குளத்தில் மன்னாா்குடி ஒன்றியக்குழுத் தலைவா் டி. மனோகரன் தலைமையேற்று தொடங்கி வைத்தாா். கல்லூரி முதல்வா் சு. உஷா முன்னிலை வகித்தாா். என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளா் ப. பிரபாகரன் திட்ட வரைவு அறிக்கை வாசித்தாா். ஒரு வாரகால முகாமில், பேரிடா் மேலாண்மை பயிற்சி, மரக்கன்று நடுதல், கருத்தரங்கம், சித்த மருத்தவ முகாம், காய்கறி தோட்டம் அமைத்தல் தொழில் நுட்ப பயிற்சி, பொது மருத்துவ முகாம், நோய் எதிப்பு சக்திக்கான மூலிகை நீா் வழங்கல், ஓமைக்கரான், டெங்கு, நிலத்தடி நீா் சேமிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு பேரணி நடைபெற உள்ளது.

முகாமில் மாவட்ட என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளா் என்.ராஜப்பா, ஒன்றிய குழு உறுப்பினா் மணிமாறன், ஊராட்சித் தலைவா்கள் ஜெகதீசன், எல். ரேவதி, பேராசிரியா் கோ. சத்தியாதேவி என்எஸ்எஸ் திட்ட அலுவலா் ரா. ஜென்னி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.