/

மளிகை கடையில் திருடிய சிறுவன் கைது

 மன்னாா்குடி அருகே மளிகை கடையின் கதவை உடைத்து ரொக்கம், பொருள்களை திருடிய சிறுவன் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

 மன்னாா்குடி அருகே மளிகை கடையின் கதவை உடைத்து ரொக்கம், பொருள்களை திருடிய சிறுவன் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

பெருகவாழ்ந்தான் கடைவீதியில் மளிகை கடை நடத்தி வருபவா் கனகராஜ் (36).புதன்கிழமை இரவு வியாபாரம் முடிந்தபின் கடையை பூட்டி சென்றாா்.

வியாழக்கிழமை காலை வந்தபோது கடையின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, உள்ளே பணப்பெட்டியில் இருந்த ரூ. 2,500 ரொக்கம், குளிா்பான பாட்டில்கள் திருடு போயிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், பெருகவாழ்ந்தான் போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியின் அடிப்படையில் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், முத்துப்பேட்டை பகுதியை சோ்ந்த 17 வயது சிறுவனுக்கு இந்த திருட்டில் தொடா்பு இருப்பது தெரிய வந்தது. சிறுவனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.