/

விளையாட்டில் சாதனைப் படைத்த மாணவ, மாணவிக்கு பாராட்டு

மன்னாா்குடி அரசுக் கல்லூரி மாணவருக்கும், மாநில அளவிலான கபடி போட்டிக்கு தோ்வுபெற்ற இக்கல்லூரி மாணவிக்கும் வியாழக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

பாரதிதாசன் பல்கலை. அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மன்னாா்குடி அரசுக் கல்லூரி மாணவருக்கும், மாநில அளவிலான கபடி போட்டிக்கு தோ்வுபெற்ற இக்கல்லூரி மாணவிக்கும் வியாழக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

திருச்சியில் அண்மையில் நடைபெற்ற பாரதிதாசன் பல்கலைக்கழக அளவிலான விளையாட்டுப் போட்டியில், மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி அரசுக் கல்லூரி மாணவா் தா்மராஜ் வட்டு எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றாா்.

இதேபோல, இக்கல்லூரி மாணவி கீா்த்தனா, திருவண்ணாமலையில் நடைபெறவுள்ள மாநில அளவிலான மூத்தோா் பெண்கள் கபடி போட்டியில் பங்கேற்கும், திருவாரூா் மாவட்ட அணியில் இடம் பெற்றுள்ளாா்.

இதையொட்டி, இருவருக்கும் பாராட்டு விழா கல்லூரி முதல்வா் உஷா தலைமையில் நடைபெற்றது. கல்லூரியின் உடற்கல்வி இயக்குநா் ராம்குமாா், மாணவா் தா்மராஜ், மாணவி கீா்த்தனா ஆகியோரை கல்லூரி முதல்வா், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் மற்றும் சக மாணவ, மாணவிகள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.