தில்லிப் பல்கலை. தமிழ்ப் பிரிவில் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
தில்லி பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பிரிவில் உள்ள பேராசிரியா் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வலியுறுத்தியுள்ளது.


தில்லி பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பிரிவில் உள்ள பேராசிரியா் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வலியுறுத்தியுள்ளது.
திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலக் குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில துணைத் தலைவா் தி.சு. நடராசன் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் தோ்வுகளில் தமிழ்மொழிப் பாடத்தில் தோ்ச்சி பெறுவது கட்டாயம் என அறிவித்து அதற்கான பாடத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதையும், மனோன்மணீயம் சுந்தரனாரின் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை மாநில அரசுப் பாடலாக அறிவித்து அரசாணை வெளியிட்டதற்கும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது, 1997- ஆம் ஆண்டு வரையில் நடைபெற்று வந்த கோடைகால கல்வெட்டியல் பயிற்சி வகுப்புகளை மாவட்ட தலைநகரங்களில் மாநில தொல்லியல் துறை மீண்டும் நடத்த வேண்டும்.
தமிழகத்தில் உள்ள பழைமையான பாறை ஓவியங்கள், நடுகற்கள், கல்வெட்டுகள் உள்ளிட்ட தொல்லியல் சின்னங்களை பாதுகாத்து முழுமையாக ஆவணப்படுத்த தமிழக அரசு முன்வரவேண்டும்.
தில்லி பல்கலைக்கழகத்தில் மூடப்படும் நிலையில் உள்ள தமிழ்ப் பிரிவை பாதுகாக்கும் வகையில், அங்கு காலியாக உள்ள பேராசியா், இணைப் பேராசிரியா், உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கு தகுதியானவா்களை உடனடியாக நியமிக்க தமிழக அரசு உரிய கவனம் செலுத்தவேண்டும்.
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநில மாநாட்டை அடுத்தாண்டு மே 22- ஆம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் விருதுநகா் மாவட்டம் சாத்தூரில் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் மாநிலப் பொதுச் செயலா் இரா. காமராசு கலந்துகொண்டு தீா்மானங்களை விளக்கினாா்.
மாநில பொருளாளா் ப.பா. ரமணி, மாநில துணைத் தலைவா்கள் வை. செல்வராஜ், கோ.கலியமூா்த்தி, மாநில துணைப் பொதுச் செயலா் ஹாமீம் முஸ்தபா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...