6-ஆவது நாளாக சாலை மறியல்: 60 போ் கைது
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி திருவாரூரில் 6-ஆவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் 60 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.


புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி திருவாரூரில் 6-ஆவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் 60 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்றவா்கள் மீது பதிவு செய்த குற்றக் குறிப்பாணை மற்றும் வழக்குகளை திரும்பப்பெற வேண்டும், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளா்கள், ஊா்ப்புற நூலகா்கள் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த செவ்வாய்க்கிழமை முதல் சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்தப் போராட்டம் 6- ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தொடா்ந்தது. திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நாகை தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் வி. சிவக்குமாா் தலைமை வகித்தாா். இதில், மாவட்டத் தலைவா் எம். ராஜமாணிக்கம், மாவட்டச் செயலாளா் வெ. சோமசுந்தரம் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். போராட்டத்தில் ஈடுபட்ட 15 பெண்கள் உள்பட 60 போ் கைது செய்யப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...