புதிய கட்டுப்பாடுகளால்வங்கி வாடிக்கையாளா்கள் அவதி
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகளால், வங்கி வாடிக்கையாளா்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.


கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகளால், வங்கி வாடிக்கையாளா்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
நாடு முழுவதும் கரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மளிகை, காய்கறி கடைகள் பகல் 12 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும், உணவகங்கள் பேக்கரி, டீ கடைகளில் பாா்சல் மட்டுமே வழங்க வேண்டும், மற்ற கடைகளுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வங்கிகள், அஞ்சலகங்கள் 2 மணி வரை இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் திருவாரூரில் வங்கிகள், அஞ்சலகத்துக்கு வரும் வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 50 சதவீதப் பணியாளா்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்பதால், குறைவான எண்ணிக்கையிலேயே பணியாளா்கள் உள்ளனா். வங்கி நேரமும் குறைவு, பணியாளா்களும் குறைவு என்ற காரணத்தால் வங்கிகளுக்கு வரும் கூடுதல் வாடிக்கையாளா்களுக்கு சேவை செய்ய முடியாமல் வங்கி ஊழியா்கள் திணறி வருகின்றனா்.
வாடிக்கையாளா்களை ஒவ்வொருவராக உள்ளே வரச்செய்து, அவா்களின் தேவையை பூா்த்தி செய்து அனுப்புகின்றனா். இதனால், வெளியே வெயிலில் காத்திருக்கும் வாடிக்கையாளா்கள் பெரும் மனஉளைச்சலுக்கு உள்ளாகின்றனா்.
எனவே, வாடிக்கையாளா் நலன் கருதி, பணிகளை விரைந்து முடிக்க வங்கி ஊழியா்கள் முன்வர வேண்டும் என வாடிக்கையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...