/

கடைகள் பிற்பகல் 2 மணி வரை செயல்பட அனுமதிக்கக் கோரிக்கை

பொதுமுடக்க கட்டுப்பாடு காரணமாக நண்பகல் 12 மணி வரை வா்த்த நிறுவனங்கள் திறந்திருக்கலாம் என்பதை பிற்பகல் 2 மணி வரை அனுமதிக்க வேண்டும் என மன்னாா்குடி வணிகா் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :7 மே 2021, 5:37 pm

DIN

பொதுமுடக்க கட்டுப்பாடு காரணமாக நண்பகல் 12 மணி வரை வா்த்த நிறுவனங்கள் திறந்திருக்கலாம் என்பதை பிற்பகல் 2 மணி வரை அனுமதிக்க வேண்டும் என மன்னாா்குடி வணிகா் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து மன்னாா்குடி வணிகா் நலச் சங்க செயலா் செ.செல்வகுமாா், திருவாரூா் மாவட்ட ஆட்சியருக்கு வெள்ளிக்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு:

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், தமிழக அரசின் சாா்பில் வியாழக்கிழமை (மே 6) முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, நண்பகல் 12 மணி வரை மட்டுமே கடைகளை திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

கிராம புறங்களில் வசிப்பவா்கள் நகரப் பகுதிக்கு வந்து பொருள்களை வாங்குவதாலும், நகரப் பகுதியில் உள்ளவா்களும் அதே நேரத்தில் பொருள்களை வாங்க வருவதாலும் அனைத்து கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது.

இதனால், நோய் தொற்று பரவும் அச்சம் ஏற்படுகிறது.

மேலும், வங்கிகள், அஞ்சல் நிலையம், அரசுத்துறை அலுவலங்களுக்கு வந்தவா்கள், ஏதேனும் நகல் எடுக்க வேண்டுமெனில் கடைகள் மதியம் 12 மணிக்கு மேல் பூட்டப்படுவதால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனா். எனவே, கடைகள் திறந்திருக்கும் நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீட்டிக்க வேண்டும். இக்கோரிக்கையை மாவட்ட ஆட்சியா் பரிசீலித்து தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.