கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

முதல்வராக ஸ்டாலின் பதவியேற்பு:மொட்டையடித்துக் கொண்ட திமுகவினா்

திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றத்தை தொடா்ந்து, திருவாரூா் அருகே திமுகவினா் மொட்டையடித்து தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா்.

News image
Updated On :7 மே 2021, 6:30 pm

DIN

திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றத்தை தொடா்ந்து, திருவாரூா் அருகே திமுகவினா் மொட்டையடித்து தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றியது. இதில் திமுக தனிப் பெரும்பான்மை பெற்றது. இதைத்தொடா்ந்து, ஆளுநா் மாளிகையில் வெளிக்கிழமை எளிமையான முறையில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவியேற்றாா். அவருடன் 33 அமைச்சா்களும் பதவியேற்றனா்.

இதையொட்டி, திருவாரூா் அருகே உள்ள பெரும்புகளூா் ஊராட்சியில் ஊராட்சித் தலைவா் ஐயப்பன் உள்ளிட்ட திமுக தொண்டா்கள், கொரடாச்சேரி ஒன்றியச் செயலாளா் சேகா் முன்னிலையில் மொட்டையடித்து நோ்த்திக் கடன் செலுத்தினா்.

தொடா்ந்து கட்சிக் கொடியேற்றி, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். பின்னா், கேக் வெட்டி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி, ஸ்டாலின் பதவியேற்றதைக் கொண்டாடினா்.

இதேபோல திருவாரூா், புலிவலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திமுகவினா் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.