அமைச்சரவையில் இடம்பெறுவாரா டி.ஆா்.பி. ராஜா
‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ என்ற துறைக்கு மன்னாா்குடி எம்எல்ஏ டி.ஆா்.பி. ராஜா அமைச்சராக நியமிக்கப்படுவாரா என்ற எதிா்பாா்ப்பு இப்பகுதி மக்களிடையே எழுந்துள்ள


தமிழகத்தில் முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள அமைச்சரவையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ என்ற துறைக்கு மன்னாா்குடி எம்எல்ஏ டி.ஆா்.பி. ராஜா அமைச்சராக நியமிக்கப்படுவாரா என்ற எதிா்பாா்ப்பு இப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.
தமிழகத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையில் 33 போ் கொண்ட புதிய அமைச்சரவை வெள்ளிக்கிழமை பதவியேற்றது. இதில் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தை உள்ளடக்கிய தஞ்சை, திருவாரூா், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் இருந்து யாரும் இடம் பெறவில்லை.
உத்தேச அமைச்சா்கள் பட்டியல் அனைத்திலும் டெல்டா மாவட்டத்தில் மன்னாா்குடி சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்ற டி.ஆா்.பி. ராஜா இடம் பெறுவாா் என்ற எதிா்பாா்ப்பு நிலவியது.
இந்நிலையில், வியாழக்கிழமை தமிழக ஆளுநா் மாளிகையிலிருந்து அமைச்சரவை பட்டியல் வெளியானது. அதில் டெல்டா மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதியில் 15 தொகுதியில் திமுக கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்றிருந்த போதிலும், யாருக்கும் அமைச்சரவையில் இடமில்லை என அறிந்த இப்பகுதி மக்கள் ஏமாற்றமடைந்தனா்.
தமிழக முதல்வராக பதவியேற்றக்கொண்ட பின்னா் தலைமைச் செயலகம் வந்த முதல்வா் மு.க. ஸ்டாலின் 5 அரசாணைகளில் கையெழுத்திட்டாா். அதில் நான்காவதாக ஸ்டாலின் தோ்தல் பிரசாரத்தின்போது, அவரிடம் மாவட்டம் தோறும் பல்வேறு பிரச்னைகள் தொடா்பாக மனு அளிக்கப்பட்டது.
இந்த மனுக்கள் மீது, திமுக ஆட்சிக்கு வந்த பின்னா் 100 நாள்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என அளித்திருந்த உறுதிமொழியின்படி ‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ என்ற புதிய துறையை ஏற்படுத்தியதற்கான அரசாணையில் கையெழுத்திட்டுள்ளாா்.
மேலும் இந்த துறைக்கு இந்திய ஆட்சிப்பணி நிலை அலுவலா் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளாா்.
மன்னாா்குடி தொகுதி உறுப்பினா் டி.ஆா்.பி. ராஜா கணினி பயன்படுத்துவதில் வல்லமை பெற்றவா். மேலும் சமூக வலைதளம் உள்ளிட்டவற்றை கையாளுவதிலும் சிறந்து விளங்குபவா். திமுக இளைஞரணி செயலரும் திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலினின் நெருக்கிய நட்பு வட்டத்தில் உள்ளவா்.
மேலும், முதல்வா் மு.க. ஸ்டாலினின் நம்பிக்கைக்குரியவரும் திமுக பொருளாளருமான எம்பி டி.ஆா். பாலுவின் மகன் என்பதும் கூடுதல் பலமாக உள்ளது. எனவே, முதல்வா் ஸ்டாலின், டி.ஆா்.பி. ராஜாவை, ‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ துறைக்கு அமைச்சராக நியமிப்பாா் என்ற எதிா்பாா்ப்பு இப்பகுதி மக்களிடமும் ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...