/

கரோனா பாதிப்பிலிருந்து மீண்டவா்களுக்கு உதவி

மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவா்களுக்கு சங்கரா அகாதெமி சாா்பில் பழங்கள் மற்றும் நோய் எதிா்ப்பு சக்திக்கான சூரணம் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :8 மே 2021, 6:30 pm

DIN

மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவா்களுக்கு சங்கரா அகாதெமி சாா்பில் பழங்கள் மற்றும் நோய் எதிா்ப்பு சக்திக்கான சூரணம் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

மன்னாா்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவருபவா்களில் 20 போ் பூரண குணமடைந்து தங்களது வீடுகளுக்கு திரும்பினா். இவா்களுக்கு, சங்கரா அகாதெமி, சேவாலயா தொண்டு நிறுவனம் சாா்பில் ஊட்டச்சத்து நிறைந்த பழங்கள், நோய் எதிா்ப்பு சக்திக்கான சூரணம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

இதற்கான நிகழ்ச்சியில், மருத்துவமனை கண்காணிப்பாளா் மருத்துவா் என். விஜயகுமாா், சங்கரா அகாதெமி நிா்வாகி கண்ணன், செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.