கூத்தாநல்லூர்: கரோனா கட்டுப்பாட்டால் வீடுகளில் ரமலான் தொழுகை 

கூத்தாநல்லூரில் கரோனா கட்டுப்பாட்டு விதிகளால், அவரவர் வீடுகளில் ரம்ஜான் தொழுகையை நடத்தினர். 
கூத்தாநல்லூரில் வீடுகளில் நடைபெற்ற ரமலான் தொழுகை.
கூத்தாநல்லூரில் வீடுகளில் நடைபெற்ற ரமலான் தொழுகை.

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் கரோனா கட்டுப்பாட்டு விதிகளால், அவரவர் வீடுகளில் ரமலான் தொழுகையை நடத்தினர். 

கண்ணுக்குத் தெரியாத கரோனா தொற்று உலக மக்களையே வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றது. அரசின் கட்டுப்பாட்டு விதிகளின்படி, ஆலய வழிபாடுகள் நடத்தப்பட முடியவில்லை. இந்நிலையில், இன்று, இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகையான ரமலான் பண்டிகை தின நாளாகும். அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளால் பள்ளி வாயில்களில் ரமலான் தொழுகை நடத்த முடியவில்லை. 

அதனால், பெரியப் பள்ளி வாயில் நிர்வாகத்தினர் சார்பில், ரமலான் தொழுகையையும் அவரவர்களின் வீடுகளியே நடத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

ரமலான் அன்று, சின்ன சிங்கப்பூர் என அழைக்கப்படும் கூத்தாந்நல்லூரில் உள்ள, பெரியப் பள்ளி, சின்னப் பள்ளி, மேலப்பள்ளி, மஸ்ஜித் கதீஜா பள்ளி, ரஷிதியா பள்ளி, ஹமீதிய்யா பள்ளி, அன்வாரியா பள்ளி, மஸ்ஜி துல் ஹீ தா, ரஹீமிய்யா பள்ளி, சிஷ்தி நகர் பள்ளி, என்.ஆர்.அய்.பள்ளி, தைக்கால் பள்ளி, மஸ்ஜித் பாத்திமா பீவி, ஆலிம் சாஹிப் தைக்கால் பள்ளி, மஸ்ஜிதுன் நியாஸ், பதுரிய்யா பள்ளி, மஸ்ஜி துன் நூர், பாத்திமீய்யா மரக்கடை பள்ளி மற்றும் தவ்ஹீத் ஜமாஅத் பள்ளி உள்ளிட்ட 21 பள்ளிகளிலும் ரம்ஜான் தொழுகை நடத்த முடியவில்லை. 

இதே போல், அத்திக்கடை, பொதக்குடி , பூதமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் ரமலான் தொழுகை நடத்த முடியாமல் முதியோர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் தவித்தனர். தொடர்ந்து, அவரவர் வீடுகளில், முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் ரமலான் தொழுகையை நடத்தினர். தொடர்ந்து, ஒருவருக்கொருவர் வணக்கங்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர். 

அதைத் தொடர்ந்து, ரம்ஜானுக்கான முட்டைக் கரு கேக், கடற்பாசி, பிரியாணி உள்ளிட்டவைகளை வழங்கினர். கரோனா தொற்று கட்டுப்பாடுகளின் விதிகளால்,கடந்த ஆண்டும் இதே நிலைமைதான் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com