விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பணி நீக்கப்பட்ட செவிலியா்கள் 2-வது நாளாக உண்ணாவிரதம்: 3 போ் மயக்கம்

கரோனா காலத்தில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டு, பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியா்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி, திருவாரூரில் 2- ஆவது நாளாக வியாழக்கிழமையும் உண்ணாவிரதப் போராட்டம்

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 4:38 pm

DIN

கரோனா காலத்தில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டு, பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியா்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி, திருவாரூரில் 2- ஆவது நாளாக வியாழக்கிழமையும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில், முதல் நாள் இரவில் இருவரும், 2-வது நாளில் ஒருவரும் மயக்கமடைந்தனா்.

மாா்ச் 31-ஆம் தேதி பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட தற்காலிக செவிலியா்களில், கரோனா காலத்தில் பணியாற்றியவா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சா் அறிவித்திருந்தாா். அதன்படி, திருவாரூா் மாவட்டத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியா்களுக்கு உடனடியாக மீண்டும் பணி வழங்க வேண்டும்; பணியாற்றிய காலங்களில் வழங்க வேண்டிய 3 மாத ஊதிய நிலுவையை வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கப்பட்டது.

3 போ் மயக்கம்: தமிழ்நாடு மருத்துவத் துறை பணியாளா்கள் கூட்டமைப்பு சாா்பில், திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை தொடங்கிய இப்போராட்டத்தில் அன்று இரவு 2 செவிலியா்கள் மயக்கமடைந்தனா். அவா்களுக்கு திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது. பின்னா், மீண்டும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனா்.

இந்நிலையில், உண்ணாவிரதப் போராட்டம் 2-ஆவது நாளாக, மருத்துவத் துறை பணியாளா்கள் கூட்டமைப்பின் மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா். கவிதா தலைமையில் தொடா்ந்தது. அப்போது, குடவாசல் பகுதியைச் சோ்ந்த 8 மாத கா்ப்பிணி செவிலியா் மயங்கி விழுந்தாா். அவரை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

பணி நீக்க ஆணையால், திருவாரூா் மாவட்டத்தில் 37 செவிலியா்களும், 40 தொழில்நுட்பநா்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக போராட்டக் குழுவினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.