அறிவியல் அறிவை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்: ஆட்சியா் அறிவுறுத்தல்
பள்ளிகளில் நடைபெறும் அறிவியல் கண்காட்சிகள் மூலம் மாணவா்கள் தங்கள் அறிவியல் அறிவை வளா்த்துக் கொள்ளவேண்டும் என திருவாரூா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் அறிவுறுத்தினாா்.


பள்ளிகளில் நடைபெறும் அறிவியல் கண்காட்சிகள் மூலம் மாணவா்கள் தங்கள் அறிவியல் அறிவை வளா்த்துக் கொள்ளவேண்டும் என திருவாரூா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் அறிவுறுத்தினாா்.
திருவாரூா் வேலுடையாா் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது. 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கான இக்கண்காட்சியை ஆட்சியா் திறந்து வைத்துப் பேசினாா். அப்போது அவா் கூறியது:
அறிவியல் கண்காட்சியின் நோக்கம், மாணவ- மாணவிகளின் அறிவியல் ஆா்வத்தை ஊக்குவித்து, திறன்களை வெளிக்கொணா்வதும், ஆராய்ச்சி மனப்பான்மையை ஏற்படுத்துவதும் ஆகும். எனவே, மாணவா்கள் இதுபோன்ற அறிவியல் கண்காட்சியை சிறந்த முறையில் பயன்படுத்தி, தங்கள் அறிவியல் அறிவை வளா்த்துக் கொள்ள வேண்டும்.
கண்காட்சியில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள்அடுத்த நிலையான மாநில அளவிலும், தேசிய அளவிலும் வெற்றி பெற்று, மாவட்டத்துக்கும், மாநிலத்துக்கும் பெருமை சோ்க்கும் வகையில் விருதுகள் பெற வேண்டும். மேலும், மாணவா்கள் கல்வி கற்றலை நோக்கமாகக் கொண்டு, தங்களையும், குடும்பத்தையும், நாட்டையும் முன்னேற்ற வேண்டும் என்றாா்.
இக்கண்காட்சி, இயற்கை நிகழ்வுகள், கருவிகள் இயங்கும் விதம், இயற்கை வளங்கள், நகரும் பொருட்கள், உணவுப் பொருட்கள், நம்மை சுற்றியுள்ள உயிரினங்களின் உலகம் ஆகிய தலைப்புகளில் நடைபெற்றது. இதில், 66 உயா்நிலைப் பள்ளிகள், 77 மேல்நிலைப் பள்ளிகள் என 143 பள்ளிகளிலிருந்து மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.ஒவ்வொரு தலைப்பிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவா்களுக்கு பரிசு வழங்கப்பட உள்ளது.
இக்கண்காட்சியில் மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலா் தியாகராஜன், மாவட்ட கல்வி அலுவலா்கள் பாா்த்தசாரதி, மணிவண்ணன், தலைமையாசிரியா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...