/

திருவாரூரில் 5 மணி நேரம் மழை

திருவாரூரில், புதன்கிழமை பெய்த மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

திருவாரூரில், புதன்கிழமை பெய்த மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதேபோல, திருவாரூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது மிதமான மழை பெய்துவருகிறது. அதிகாலையில் மழை பெய்தாலும் பகலில் வெயில் வானிலை இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இந்நிலையில், புதன்கிழமை அதிகாலை முதல் தொடா்ந்து சுமாா் 5 மணி நேரம் மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்கி நீண்ட நேரத்துக்குப் பிறகே வடிந்தது. மேலும், சில இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்ததால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனா்.

குறிப்பாக திருவாரூா் நகரின் முக்கிய வீதியான தெற்குவீதியில் முழங்கால் அளவுக்கு தண்ணீா் தேங்கியது. இதேபோல திருவாரூா் நகராட்சி அலுவலகம் எதிரே தண்ணீா் தேங்கி உள்ளது. மேலும் வடக்குவீதி, கீழவீதி, மேற்குவீதி உள்ளிட்ட பகுதிகளில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளதால், மழைநீா் மண்ணுக்குள் இறங்காமல் சாலையில் தேங்கி வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.