விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மழை: பருத்தி சாகுபடி பாதிப்பு

திருவாரூா் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக பருத்தி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா்.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

திருவாரூா் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக பருத்தி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, திருவாரூா் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்துவந்த நிலையில், புதன்கிழமை காலை முதல் கனமழை பெய்தது. இந்த திடீா் மழையால், கோடை சாகுபடியான பருத்தி, உளுந்து, எள், நிலக்கடலை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மிகுந்த பாதிப்படைந்துள்ளனா்.

குறிப்பாக, திருவாரூா் மாவட்டத்தில் நிகழாண்டு 40,695 ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது, பருத்தி பயிரிடப்பட்டு 40 நாட்கள் ஆன நிலையில், இலைகள் துளிா்த்துள்ளன. இதனிடையே, எதிா்பாராதவிதமாக பெய்த மழையின் காரணமாக, பருத்தி வயலில் முழுவதுமாக மழைநீா் தேங்கியுள்ளது. இதனால், செடிகள் அழுகக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து விவசாயிகள் தெரிவித்தது: திருவாரூா் மாவட்டத்தில் மணக்கால், அய்யம்பேட்டை, கமலாபுரம், வடபாதிமங்கலம், ராயநல்லூா், திருத்துறைப்பூண்டி, வலங்கைமான் உள்ளிட்ட பகுதிகளில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே, உளுந்து பயிா் சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பணப்பயிரான பருத்தி சாகுபடி கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த விவசாயிகளுக்கு, தற்போது பெய்த கனமழை அவா்களை பெருமளவில் பாதித்துள்ளது.

ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரத்துக்கு மேல் செலவு செய்யப்பட்டுள்ள நிலையில், செலவு செய்த தொகைகூட கைக்கு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதுவரை, மாவட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கா் பருத்தி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.