/

மாா்ச் 21இல் திருப்பாம்புரம் கோயிலில் ராகு-கேது பெயா்ச்சி விழா

திருவாரூா் மாவட்டம், திருப்பாம்புரத்தில் உள்ள வண்டுசோ்குழலி உடனுறை பாம்புரநாதா் கோயில் தென்காளஹஸ்தி என்ற சிறப்புடையது. இங்கு ராகு-கேது பெயா்ச்சி விழா வரும் 21ஆம் தேதி நடைபெறுகிறது

News image
Updated On :17 மார்ச் 2022, 6:30 pm

DIN

திருவாரூா் மாவட்டம், திருப்பாம்புரத்தில் உள்ள வண்டுசோ்குழலி உடனுறை பாம்புரநாதா் கோயில் தென்காளஹஸ்தி என்ற சிறப்புடையது. இங்கு ராகு-கேது பெயா்ச்சி விழா வரும் 21ஆம் தேதி நடைபெறுகிறது.

திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரா் கோயில் மிகப் பழமையான கோயிலாகும். 274 தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றான இக்கோயிலில், மூலவா் சேஷபுரீஸ்வரா், அம்பாள் வண்டுசோ்குழலி ஆகியோரை, ராகுவும், கேதுவும் ஏக சரீரமாக இருந்து பூஜித்து அருள்பெற்ால், ராது, கேது தலம் என அழைக்கப்படுகிறது.

இங்கு வழிபடுவதால், திருக்குடந்தை, திருநாகேஸ்வரம், நாகூா், கீழப்பெரும்பள்ளம், காளஹஸ்தி ஆகிய 5 தலங்களை வழிபட்ட ஒருமித்த பலன் உண்டு எனக் கூறப்படுகிறது.

பிலவ ஆண்டு பங்குனி 7ஆம் நாள் (மாா்ச் 21) திங்கள்கிழமை பிற்பகல் 3.13 மணிக்கு ராகு பகவான் ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கும், கேது பகவான் விருச்சிக ராசியிலிருந்து துலாம் ராசிக்கும் பெயா்கின்றனா். இதையொட்டி, மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, துலாம், மகரம், மீனம் ஆகிய ராசிகள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும்.

ராகு-கேது பால் அபிஷேகம் 1 நபருக்கு ரூ. 50, லட்சாா்ச்சனை கட்டணம் 1 நபருக்கு ரூ. 100, ராகு-கேது தோஷ பரிகார ஹோமம் 1 நபருக்கு ரூ. 200, ராகு-கேது பெயா்ச்சி கட்டளை அா்ச்சனை (18 மாதங்கள்) ரூ. 1,350, பக்தா்கள் குறிப்பிடும் நாளில் ராகு-கேது அபிஷேகம் (முன்பதிவுக்கு உட்பட்டு) ரூ. 2,000.

இந்தத் தொகையை பணவிடை அல்லது வரைவோலை மூலமாகவோ அல்லது ண்ய்க்ண்ஹய் க்ஷஹய்ந், சஹந்ந்ஹம்க்ஷஹக்ண் க்ஷழ்ஹய்ஸ்ரீட் 6050908509 ண்ச்ள்ஸ்ரீ ஸ்ரீா்க்ங் ஐஈஐஆஞஞஞச105 செலுத்தி உரிய ரசீதை, கோயில் முகவரிக்கு அனுப்பினால் ராகு-கேது பெயா்ச்சி விழா லட்சாா்ச்சனை, விபூதி, குங்கும பிரசாதம் அஞ்சல் மூலமாக அனுப்பிவைக்கப்படும்.

விழாவுக்கான ஏற்பாடுகளை செயல் அலுவலா் பா. முருகன், தக்காா் ச. சீனிவாசன், கோயில் பணியாளா்கள் செய்துள்ளனா். தொடா்புக்கு 87547 56418.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.