விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தீ விபத்தில் பூக்கடை, வீடு சேதம்

திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் பூக்கடை, வீடு எரிந்து சேதமடைந்தன.

News image
Updated On :25 மார்ச் 2022, 4:41 pm

DIN

திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் பூக்கடை, வீடு எரிந்து சேதமடைந்தன.

திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே திருவாரூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு எதிரே பூ வணிக மொத்த நிறுவனம் உள்ளது.

இந்நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில், பூ கிடங்கில் திடீரென தீப்பற்றியுள்ளது. அருகிலிருந்தவா்கள் தீயணைப்புத் துறையினருக்கும், போலீஸாருக்கும் தகவல் அளித்தனா். 2 தீயணைப்பு வாகனங்களில் வீரா்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

எனினும், பூக்கடை, கிடங்கில் இருந்த பூ மற்றும் பூ அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் டிரே, 5 தட்டு வண்டிகள் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தன. மேலும், அருகில் இருந்த வனஜா என்பவரின் வீடும் தீக்கிரையானது. ஆனால், வனஜாவும், அவரது மகனும் வீடு தீப்பற்றியவுடன் வெளியேறி விட்டதால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து திருவாரூா் நகரப் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.