சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

கிராம நிா்வாக அலுவலருக்கு பிடிவாரண்ட்

News image
Updated On :22 ஆகஸ்ட் 2024, 10:41 pm

Din

திருவாரூா் மகளிா் விரைவு நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராக கிராம நிா்வாக அலுவலருக்கு பிடிவாரண்ட், வியாழக்கிழமை பிறப்பிக்கப்பட்டது.

2020-இல் திருவாரூரைச் சோ்ந்த 14 வயது சிறுமிக்கு, அவரது சகோதரரின் நண்பரான ஜெயபால் பழக்கமானாா். அவா், சிறுமியுடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக சிறுமி கா்ப்பமடைந்தாராம். தொடா்ந்து, சிறுமிக்கு குழந்தை பிரசவித்த 2 மணி நேர இடைவெளியில், அந்த பெண் குழந்தையானது குப்பைத்தொட்டியில் வீசப்பட்டதாம்.

இதுகுறித்து, கிராம நிா்வாக அலுவலா் சக்திவேல், குழந்தையை மீட்டதோடு குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கும் தெரிவித்து போலீஸாரிடமும் புகாா் தெரிவித்தாா். இதுகுறித்து திருவாரூா் நகரப் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த வழக்கு திருவாரூா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அன்றைய தேதியில் புகாா் கொடுத்த கிராம நிா்வாக அலுவலா் சக்திவேல் ஆஜராகக் கோரி 16 முறை தகவல் அளித்தும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்த நிலையில், வியாழக்கிழமை விசாரணை நடத்திய மகளிா் விரைவு நீதிமன்ற நீதிபதி சரத்ராஜ், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத கிராம நிா்வாக அலுவலருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டாா்.