விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் ஆட்சியா் தகவல்

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் ஆட்சியா் தகவல்

News image
Updated On :16 ஜூன் 2024, 1:48 am

Din

திருவாரூா், ஜூன் 15: திருவாரூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது:

திருவாரூா் மாவட்டத்தில் 26,409 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. 2023-2024 ஆம் நிதியாண்டில் மனவளா்ச்சிக்குன்றியோா், கடுமையாக கை, கால் பாதிக்கப்பட்டோா், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோா், நாள்பட்ட நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டோா் ஆகிய பிரிவினரில் 5,021 நபா்களுக்கு மாதம் ரூ.2,000 வீதம் மொத்தம் ரூ.11,92,42,000 அவா்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

2023-2024 ஆம் நிதியாண்ல் மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் புரிய மானியம் வழங்கும் திட்டத்தின்கீழ், திருவாரூா் மாவட்டத்திற்கு ரூ.9,84,400 நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு, 29 நபா்களுக்கு ரூ.9,84,333 மானியமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஒன்றாம் வகுப்பு முதல் கல்லூரி வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ், 330 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு ரூ.20,74,000 வழங்கப்பட்டுள்ளது.

75 சதவீதத்திற்கு மேல் கண்பாா்வையற்ற மாணவ, மாணவிகளுக்கு எளிதில் தோ்வு எழுத உதவும் வகையில் வாசிப்பாளா் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ், 6 மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு ரூ.20,000 மாணவா்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. 152 நபா்களுக்கு இலவச பேருந்து பயணச்சலுகை அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

2023-2024ஆம் நிதியாண்டில் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் வழங்கும் திட்டத்தின்கீழ், 87 பயனாளிகளுக்கு ரூ.83,52,957 மதிப்பில் வழங்கப்பட்டது. தெருக்களில் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவா்களை மீட்புத்திட்டத்தின்கீழ், 7 நபா்களை மீட்பு செய்ததற்கு ரூ.10,500 செலவுத்தொகை வழங்கப்பட்டது. செயற்கை கால்கள் வழங்கும் திட்டத்தின்கீழ், 9 பயனாளிகளுக்கு ரூ.46,800 மதிப்பில் செயற்கை கால்கள் வழங்கப்பட்டன. இதுதவிர, இன்னும் பல்வேறு நலத்திட்ட உதவிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் வழங்கப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா்.