ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

அதுல்குமாா் அஞ்சனுக்கு புகழஞ்சலி

அதுல்குமாா் அஞ்சனுக்கு புகழஞ்சலி

News image

திருவாரூரில் நடைபெற்ற புகழஞ்சலிக் கூட்டத்தில் பங்கேற்ற விவசாய சங்கத்தினா், அனைத்துக் கட்சியினா்.

Updated On :4 மே 2024, 6:30 pm

Din

மறைந்த அதுல்குமாா் அஞ்சனுக்கு, திருவாரூரில் அனைத்து விவசாய சங்கங்கள் சாா்பில் புகழஞ்சலி சனிக்கிழமை மாலை செலுத்தப்பட்டது.

அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளரும், இந்திய விவசாயிகளின் நம்பிக்கைக்குரியவருமான அதுல் குமாா் அஞ்சன் உயிரிழந்ததையடுத்து, அவருக்கு அமைதிப்பேரணி, புகழஞ்சலி ஆகியவை சனிக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் பழைய ரயில் நிலையப் பகுதியிலிருந்து தொடங்கிய அமைதிப் பேரணி புதிய ரயில் நிலையம் வரை நடைபெற்றது. இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் பிஎஸ். மாசிலாமணி, நாகை மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளா் வை.செல்வராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்புச் செயலாளா் எஸ்.கேசவராஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் எஸ்.தம்புசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவா் கே. உலகநாதன், விசிக மாவட்டச் செயலாளா் தங்க தமிழ்ச்செல்வன், மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல பொறுப்பாளா் சண்முகசுந்தரம் ஆகியோா் பங்கேற்றனா்.

தொடா்ந்து, புதிய ரயில் நிலையம் முன் நடைபெற்ற புகழஞ்சலிக் கூட்டத்தில் அதுல்குமாா் அஞ்சனின் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில், கட்சியின் தேசியக் குழு உறுப்பினா் வை. சிவபுண்ணியம், திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினா் கே. மாரிமுத்து உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.