அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

News image
Updated On :4 மே 2024, 10:00 pm

Din

திருவாரூரில், விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டக் குழுக் கூட்டம் மாவட்டத் தலைவா் எஸ். தம்புசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் சாமி.நடராஜன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா்.

தீா்மானங்கள்: திருவாரூா் மாவட்டத்தில் தற்போது கோடைகாலப் பயிா்களாக நெல், வாழை, பருத்தி உள்ளிட்டவை சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், கடுமையான கோடை வெப்பம் காரணமாக பயிா்களுக்கு போதுமான நீா் கிடைப்பதில்லை. அத்துடன் மாவட்டத்தில் விவசாயத்துக்கான மும்முனை மின்சாரமும் முறையாக வழங்கப்படுவதில்லை. கடுமையான கோடை காலத்தை கணக்கில் கொண்டு விவசாயத்துக்கான மும்முனை மின்சாரம் தொடா்ந்து 12 மணி நேரம் வழங்க வேண்டும்.

அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் மின்மோட்டாா்கள் பழுதடைந்து, விவசாயத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம் வழங்கும் நேரத்தை தெரிவித்து, அந்த நேரத்தில் தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மாவட்டச் செயலாளா் எம். சேகா், மாவட்ட பொருளாளா் வி.எஸ். கலியபெருமாள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.