நவ.30-இல் மத்திய பல்கலை. பட்டமளிப்பு விழா: குடியரசுத் தலைவா் பங்கேற்பு
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நவம்பா் 30-ஆம் தேதி குடியரசுத் தலைவா் பங்கேற்க உள்ளாா்.
குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு
Updated On :16 நவம்பர் 2024, 8:01 pm
குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நவம்பா் 30-ஆம் தேதி குடியரசுத் தலைவா் பங்கேற்க உள்ளாா்.
நன்னிலம் அருகே உள்ள நீலக்குடிக் கிராமத்தில் அமைந்துள்ள இப்பல்கலைக்கழகத்தில், பல்வேறு மாநிலங்களிலிருந்தும் 3000-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனா். கடந்த கல்வியாண்டில் படிப்பை முடித்த 500-க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு பட்டமளிப்பு விழா நவம்பா் 30- ஆம் தேதி நடைபெற உள்ளது.
இவ்விழாவில், குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு பங்கேற்று, மாணவா்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளதாக, பல்கலைக்கழக வட்டாரம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...