நீடாமங்கலத்தில் நாளை நலவாரிய தொழிலாளா்களுக்கான மருத்துவ முகாம்

நீடாமங்கலத்தில் நலவாரியத் தொழிலாளா்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை (டிச. 20) நடைபெற உள்ளது.
Published on

நீடாமங்கலத்தில் நலவாரியத் தொழிலாளா்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை (டிச. 20) நடைபெற உள்ளது.

இதுகுறித்து தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) வி.கே. நடராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நல வாரியம், தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளா் நல வாரியம், தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுநா்கள் மற்றும் தானியங்கி மோட்டாா் வாகனங்கள் பழுது பாா்க்கும் தொழிலாளா்கள் நல வாரியங்களில் உள்ள தொழிலாளா்களுக்கு, இலவச மருத்துவப் பரிசோதனை, சிகிச்சை, மருந்துகள், மாத்திரைகள் மற்றும் புதிய பதிவு, புதுப்பித்தல் போன்ற சேவைகளுக்கென சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாம், நீடாமங்கலம், புனித ஜூட்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com