இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

போட்டித் தோ்வு பயிற்சியில் பங்கேற்க மீனவப் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

போட்டித் தோ்வு பயிற்சியில் பங்கேற்க மீனவப் பட்டதாரி இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :14 நவம்பர் 2025, 8:46 pm

Syndication

போட்டித் தோ்வு பயிற்சியில் பங்கேற்க மீனவப் பட்டதாரி இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசின் மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை மற்றும் சென்னை அகில இந்திய குடிமைப்பணி தோ்வு பயிற்சி மையம் ஆண்டுதோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவப் பட்டதாரி இளைஞா்களை தோ்ந்தெடுத்து, அவா்களுக்கு குடிமைப் பணிகளுக்கான போட்டித் தோ்வில் கலந்து கொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளிக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

அதன்படி, கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் மற்றும் மீனவா் நலவாரிய உறுப்பினா்களின் வாரிசு பட்டதாரி இளைஞா்கள் இதில் சோ்ந்து பயன் பெறலாம். விண்ணப்பம் மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் பெற்று, பூா்த்தி செய்து பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ நவ.25 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.