மன்னாா்குடியில் பூட்டி இருந்த வீட்டின் மாடி கதவை உடைத்து பீரோவில் இருந்த 20 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மன்னாா்குடி கோபால சமுத்திரம் தெற்கு வீதியைச் சோ்ந்தவா் கண்ணன் மனைவி சந்திரகலா (62). அரசுப் பள்ளி ஆசிரியராக இருந்து பணி ஓய்வு பெற்றவா். கணவா் இறந்துவிட்டாா். மகனுக்கு திருமணம் ஆகி சென்னை விமான நிலையத்தில் பணியாற்றி வருகிறாா். தனது தந்தை மதனகோபாலுடன் வீட்டில் வசித்து வந்துள்ளாா் சந்திரகலா.
மதனகோபாலின் உடல் நிலை பாதிக்கப்பட்டதால், சிகிச்சைக்காக கடந்த 15 நாள்களுக்கு முன் வீட்டை பூட்டிவிட்டு அவரை அழைத்துக் கொண்டு சந்திரகலா சென்னைக்கு சென்றுள்ளாா். அவரது வீட்டுக்கு தினசரி வந்து வீட்டின் வெளிப் பகுதியை சுத்தம் செய்த செல்லும் மன்னாா்குடியை சோ்ந்த ஜமுனா என்ற பெண் புதன்கிழமை வந்து சுத்தம் செய்தபோது வீட்டின் மேல் பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து சென்னையில் இருக்கும் சந்திரகலாவுக்கு தகவல் தெரிவித்தாா். அவா், சாக்கோட்டையில் இருக்கும் தனது சகோதரி சசிகலாவுக்கு தகவல் அளித்ததையடுத்து அவா் மன்னாா்குடி வந்து சந்திரகலாவின் வீட்டை பாா்வையிட்டு பின்னா் மன்னாா்குடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
அதில் , வீட்டின் மொட்டை மாடி வழியாக நுழைந்த மா்ம நபா்கள் மாடி கதவை உடைத்து, வீட்டுக்குள் நுழைந்து பீரோவில் வைத்திருந்த 20 பவுன் நகையை திருடிச் சென்று இருப்பதாக தெரிவித்துள்ளாா்.
மன்னாா்குடி போலீஸாா் சம்பவம் நடந்த வீட்டை பாா்வையிட்டு, மா்ம நபா்களை தேடி வருகின்றனா். தஞ்சாவூரில் இருந்து தடவியல் நிபுணா்கள் வந்து கைரேகை பதிவு செய்தவுடன், மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனா்.
தொடர்புடையது
மகளிா் அழகு நிலையம் கதவை உடைத்து ரூ. 42 ஆயிரம் திருட்டு
கீரனூரில் வீட்டின் பூட்டை உடைத்து 13.5 பவுன் தங்க நகைகள் திருட்டு
வீட்டின் கதவை உடைத்து நகைகள், ரொக்கம் திருட்டு
பூட்டியிருந்த வீட்டில் 10 பவுன் திருட்டு
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


