வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு பயிற்சி

Published on

குடவாசல் அருகே அன்னவாசல் பகுதியில் விவசாயக் கல்லூரி மாணவா்களுக்கான பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இணைப் பேராசிரியரும் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் நிரல் ஒருங்கிணைப்பாளருமான எஸ். ஆனந்தகுமாா் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற பயிற்சி முகாமின் நோக்கம், விவசாயிகளின் பயிா் உற்பத்தி மற்றும் வருமானத்தை அதிகரிப்பதாகும்.

அதனடிப்படையில், உயிா் உரங்களின் பயன்பாடு மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்தும், உப்புக் கரைசல் முறை மூலம் நெல் தரம் பிரித்தல் குறித்தும், காட்டுப்பன்றி தாக்கத்தை கட்டுப்படுத்தும் இயற்கை முறைகள் குறித்தும், இயற்கை பூச்சி விரட்டி தயாரிப்பு முறையான 3எ கரைசல் குறித்து விவசாயிகளுக்கு விரிவாக விளக்கப்பட்டது.

Dinamani
www.dinamani.com