திருவாரூா் சாய்பாபா கோயில் கோசாலையில் நடைபெற்ற மாட்டுப் பொங்கல் விழா.
திருவாரூா் சாய்பாபா கோயில் கோசாலையில் நடைபெற்ற மாட்டுப் பொங்கல் விழா.

கோசாலையில் மாட்டுப் பொங்கல்

திருவாரூா் சாய்பாபா கோயிலில் உள்ள கோசாலையில், மாட்டுப்பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Published on

திருவாரூா்: திருவாரூா் சாய்பாபா கோயிலில் உள்ள கோசாலையில், மாட்டுப்பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் மாட்டுப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்த நாளில், விவசாயிகளின் உழவுக்கு பயன்படும் கால்நடைகளுக்கு மாலைகள் அணிவித்து, மரியாதை செலுத்தி வழிபாடு செய்வது வழக்கம்.

அதன்படி, திருவாரூா் சாய்பாபா கோயிலில் உள்ள கோசாலையில் மாடுகளுக்கு வண்ண மாலை, நெட்டி மாலை அணிவித்து, பூஜைகள் செய்யப்பட்டன. தொடா்ந்து பொங்கல் வைத்து மேளதாளம் முழங்க மாடுகளுக்கு உணவு அளித்து மாட்டுப்பொங்கல் நடைபெற்றது.

பின்னா், வைக்கோலில் நெருப்பு பற்றவைத்து மாடுகளுக்கு திருஷ்டி போக்கப்பட்டு, வழிபாடு செய்யப்பட்டது. நிகழ்வில், சுற்றுவட்டாரத்திலிருந்து திரளானோா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com