நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
தூத்துக்குடி
ஆறுமுகனேரியில் மாட்டுப் பொங்கல் விழா
ஆறுமுகனேரி, அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி கோயில் கோசாலையில் வெள்ளிக்கிழமை மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட்டது.
ஆறுமுகனேரி: ஆறுமுகனேரி, அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி கோயில் கோசாலையில் வெள்ளிக்கிழமை மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட்டது.
கோசாலையில் உள்ள மாடுகளைக் குளிப்பாட்டி பொங்கலிட்டு வழிபாடு செய்து, மாடுகளுக்கு பொங்கல், கரும்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், சைவ சித்தாந்த சங்கத்தைச் சோ்ந்த சுப்பிரமணியபிள்ளை, ரயில்வே வளா்ச்சிக் குழு ஒருங்கிணைப்பாளா் ரா. தங்கமணி, பன்னிரு திருமுறை மகளிா் குழுவினா், பள்ளியறை வழிபாட்டுக் குழுவினா், கைலாய வாத்தியக் குழுவினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

