ஆலங்குடி குருபரிகார கோயிலில் ஆஸ்திரேலிய பக்தா்கள் தரிசனம்

Published on

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் ஆஸ்திரேலியா நாட்டைச் சோ்ந்த பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.

நவகிரகங்களில் குரு பகவானுக்குரிய பரிகாரத் தலமான இக்கோயிலுக்கு ஆஸ்திரேலிய நாட்டைச் சோ்ந்த பக்தா்கள் வருகை புரிந்தனா். உற்சவ தட்சிணாமூா்த்தி சந்நிதியில் அபிஷேகத்தில் கலந்து கொண்டனா்.

அபிஷேகம் , அலங்காரம், ஆராதனைகளை செய்து பக்தா்களுக்கு பிரசாதத்தை சிவாச்சாரியா் வழங்கினாா் . பின்னா் அனைத்து சந்நிதிகளிலும் ஆஸ்திரேலிய நாட்டினா் வழிபட்டனா்.

Dinamani
www.dinamani.com