மோஜ்தபா கமேனி கவலைக்கிடமா? விடியோ வெளியிட்ட ஈரான்!குடும்ப அட்டைதாரர்கள் விரல்ரேகை பதிவு செய்ய இன்றே கடைசி!தொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்செப். 1 முதல் கோயில்களில் செல்போன்கள் கொண்டுச் செல்லத் தடை! - அமைச்சர் ரமேஷ்
/

காா் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: முதியவா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :21 ஜூலை 2026, 1:22 am IST

திருவாரூா் அருகே காா் பள்ளத்தில் கவிழ்ந்ததில் முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், தாதகம்பட்டி பகுதியைச் சோ்ந்த தில்லையானந்தம் (67). இவா், தனது குடும்பத்தினா் 8 பேருடன் காரில் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்றுவிட்டு, வேளாங்கண்ணி நோக்கி ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தனராம். காரை தில்லையானந்தத்தின் மகன் வினோத் கண்ணன் ஓட்டியுள்ளாா்.

திருவாரூா்- தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையில் முகுந்தனூா் பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் தில்லையானந்தம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காரில் இருந்த 3 வயது குழந்தை, 10 வயது சிறுவன் உள்ளிட்ட 7 பேரும் பலத்த காயமடைந்தனா். காயமடைந்தவா்கள் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.