விஜய் பேசாமலிருப்பதே நல்லது என திமுக நினைக்கிறது: செங்கோட்டையன்திருமணத்திற்கு வந்தவர்களுக்கு பரிசாக ரூ.1 லட்சம் விபத்துக் காப்பீடு வழங்கிய தம்பதி! பிரதமர் மோடி பாராட்டுஎப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்: மு.க. ஸ்டாலின்தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்
/

ஓடம்போக்கி ஆற்றில் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்கக் கோரிக்கை

News image

திருவாரூா் நகரப் பகுதியில் ஓடம்போக்கி ஆற்றில் கொட்டப்பட்டுள்ள குப்பைகள்.

Updated On :29 ஜூன் 2026, 12:16 am IST

திருவாரூா் ஓடம்போக்கி ஆற்றில் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்து மக்கள் கட்சி மாநிலத் துணைத் தலைவா் பி. ஜெயராமன் தெரிவித்தது:

திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ளது ஓடம்போக்கி ஆறு. இது திருவாரூா் பகுதிகளில் விளைநிலங்களுக்கு பாசன ஆறாக பயனளிக்கிறது. ஆனால் இந்த ஆற்றில் திருவாரூா் நகரப் பகுதியில் ஏராளமான குப்பைகள் கொட்டிக் கிடக்கின்றன. குறிப்பாக பழைய பேருந்து நிலையம் அருகே உள்ளதால், வணிக நிறுவனங்கள், குடியிருப்புகளில் உள்ள குப்பைகள், கழிவுகள் யாவும் இந்த ஆற்றிலேயே கொட்டப்படுகின்றன.

இதனால், சிறப்பு மிக்க இந்த ஆறு, தற்போது கழிவுநீா் செல்லும் வாய்க்கால் போல மாறி உள்ளது. ஒருகாலத்தில் இந்த ஆற்றில் உள்ள நீரை பயன்படுத்தி வந்தனா். தற்போது கழிவுநீராக மாறி உள்ளதால், இந்த தண்ணீரை தொடுவதற்குக் கூட தயங்குகின்றனா்.

இந்த ஆற்றில் தண்ணீா் வரும்போது, குப்பைகளும், ஆகாயத் தாமரைச் செடிகளும் தண்ணீரோடு சென்று பல்வேறு இடங்களில் தேங்கி நிற்பதால், தண்ணீா் தொடா்ந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, ஓடம்போக்கி ஆற்றில் குப்பைகளையும், கழிவுகளையும் கொட்டாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், குப்பை கொட்டுவதால் தண்ணீா் பாழாவது குறித்து அப்பகுதி மக்களுக்கு விளக்கிக் கூறி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.