மெட்ரோ ரயில் கட்டண உயர்வு:  மீனாட்சி லேகி எம்.பி. வீடு அருகே ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தில்லியில் மெட்ரோ ரயில் கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து  புது தில்லி  மக்களவைத் தொகுதி பாஜக உறுப்பினர் மீனாட்சி லேகி  வீடு
Updated on
1 min read

தில்லியில் மெட்ரோ ரயில் கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து  புது தில்லி  மக்களவைத் தொகுதி பாஜக உறுப்பினர் மீனாட்சி லேகி  வீடு அருகே பூங்கொத்துகளுடன் ஆம் ஆத்மி கட்சியினர்  வெள்ளிக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மெட்ரோ ரயில் கட்டண உயர்வுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியினர் தொடர்ந்து 7 நாள்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக,  தெற்கு தில்லி செளத் எக்ஸ்டென்ஷனில் உள்ள  மீனாட்சி லேகி எம்பியின்  வீடு அருகே ஆம் ஆத்மி கட்சியினர் வெள்ளிக்கிழமை கையில் ரோஜா பூங்கொத்துகளை ஏந்தி அமைதி வழியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  
இந்த ஆர்ப்பாட்டத்தில்,  ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மாளவியா நகர் சட்டப்பேரவை உறுப்பினர் சோம்நாத் பார்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  
ஆர்ப்பாட்டத்தின்போது,  மெட்ரோ ரயில் கட்டண
உயர்வைக் கண்டித்தும்,  கட்டணத்தைக் குறைக்க வலியுறுத்தியும்  எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி கோஷமிட்டனர்.
இதேபோல,  அக்டோபர்  21-ஆம் தேதி மனோஜ் திவாரி எம்பி  வீடு அருகே  ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com