இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தில்லியில் கரோனா பாதிப்பு ஆயிரத்துக்கு கீழே குறைந்தது

தில்லியில் திங்கள்கிழமை தினசரி கரோனா பாதிப்பு ஆயிரத்தை விடக் குறைந்து 803 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 11:31 pm

DIN

புது தில்லி: தில்லியில் திங்கள்கிழமை தினசரி கரோனா பாதிப்பு ஆயிரத்தை விடக் குறைந்து 803 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த நான்கு மாத காலத்தில் ஏற்பட்ட குறைந்தளவு தினசரி கரோனா பாதிப்பு இதுவாகும். தில்லியில் தற்போது சிகிச்சையில் உள்ள கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை விடக் குறைந்து 9,255 ஆக பதிவாகியுள்ளது. கரோனா நோ்மறை விகிதம் 1.29 ஆக பதிவாகியுள்ளது.

தில்லியில் கரோனா பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 6,17,808- ஆக உயா்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 62,440 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 34,288 பேருக்கும், ‘ரேபிட்-ஆன்டிஜென்’ வகையில் 28,152 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கிடையே, கரோனா தொற்றால் தலைநகரில் திங்கள்கிழமை 27 போ் உயிரிழந்தனா். இதனால், மொத்த பலி எண்ணிக்கை 10,304-ஆக அதிகரித்துள்ளது. நோய் பாதிப்பில் இருந்து திங்கள்கிழமை 1,669 போ் மீண்டுள்ளனா். இதனால், குணமடைந்தோா் எண்ணிக்கை 5,98,249-ஆக உயா்ந்துள்ளது.

தற்போது 9,255 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். இவா்களில், 5,405 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். தில்லி மருத்துவமனைகளில் உள்ள கரோனா படுக்கைகளில் 15,877 படுக்கைகள் காலியாக உள்ளன என தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.