தில்லி சட்டப்பேரவையில் செவ்வாய்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் (சிஏஜி) அறிக்கையில் தில்லி அரசின் ரேஷன் மோசடிகள் வெளிப்பட்டுள்ளதாகவும் அந்த மோசடிகளில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாகக் கைது செய்யக் கோரி தில்லி சட்டப்பேரவைக்கு அருகே தில்லி பாஜக சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தில்லி பாஜக பொதுச் செயலர் ராஜேஷ் பாட்டியா, பிரதேச அமைப்புப் பொதுச் செயலர் சித்தார்தன், தேசியச் செயலர் ஆர்.பி.சிங், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீனாக்ஷி லேகி, ரமேஷ் பிதூரி , உதித் ராஜ், தில்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தா, பிரதேச செயலர் ரவீந்தர் குப்தா, பிரதேச நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஜெய் பிரகாஷ், அபய் வர்மா, மோகன் சிங் பிஸ்ட், ராஜீவ் பாபர், ஜோகிதா சிங், விக்ரம் பிதூரி, கஜேந்திர யாதவ் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் தில்லி பாஜக பொதுச் செயலர் ராஜேஷ் பாட்டியா பேசுகையில், "அரவிந்த் கேஜரிவால் மீது நம்பிக்கை வைத்து தில்லி மக்கள் அவரை தேர்ந்தெடுத்தனர்.
ஆனால், அவர் ஏழை மக்களின் ரேஷன் பொருள்களைக் கொள்ளை அடித்துள்ளார். ரேஷன் மோசடி விவகாரத்தில் அரவிந்த் கேஜரிவாலுக்கு தண்டனை கிடைக்க தில்லி பாஜக தொடர்ந்து போராடும்' என்றார்.
புது தில்லி மக்களவைத் தொகுதி உறுப்பினர் மீனாக்ஷி லேகி பேசுகையில், "மத்திய அரசால் ஏழை மக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் பொருள்கள் தில்லி முதல்வருக்கு நெருக்கமான ரேஷன் மாபியாவுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன. கடந்த 3 ஆண்டுகால ஆம் ஆத்மி ஆட்சியில் ரூ.5,400 கோடி மதிப்பிலான ரேஷன் மோசடி நடைபெற்றுள்ளது' என்றார்.
தெற்கு தில்லி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ரமேஷ் பிதூரி பேசுகையில், "ரேஷன் பொருள் மோசடியில் ஆம் ஆத்மி அரசின் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது.
நேர்மை தொடர்பாக மற்றவர்களுக்குப் பாடம் எடுத்த ஆம் ஆத்மியினரின் உண்மை முகத்தை தில்லி மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். ஆம்ஆத்மியினரின் மோசடியால் தில்லி சட்டப்பேரவையின் மாண்பு குலைந்துள்ளது' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

13/32: நாக் அவுட் சுற்றுக்குத் தேர்வாகியுள்ள 13 அணிகள்!

அசாமில் இருந்து துபை, அபுதாபிக்கு நேரடி விமானம்! ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு!

தவெக அரசுக்கு உதவவில்லை! உண்மை என்ன? ஸ்ரீதர் வேம்பு விளக்கம்

தங்கம் விலை அதிகரிப்பால் இரு மடங்கு உயர்வு... பிஃபா உலகக் கோப்பையின் விலை இவ்வளவா?
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani


