தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

உமர் காலித் தாஉமர் காலித் தாக்கப்பட்ட சம்பவம்: இருவரிடம் போலீஸார் விசாரணைக்கப்பட்ட சம்பவம்: இருவரிடம் போலீஸார் விசாரணை

தில்லியில் கடந்த வாரம் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் உமர் காலித் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி

Updated On :21 ஆகஸ்ட் 2018, 1:29 am IST

தில்லியில் கடந்த வாரம் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் உமர் காலித் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி தாக்குல் சம்பவம் தொடர்பாக இருவரைப் பிடித்து தில்லி போலீஸார் விசாரித்து வருகின்றனர். அவர்கள் இருவரும் ஹரியாணாவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு விசாரணைக்காக பிடித்து அழைத்து வரப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
இது குறித்து தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "சர்வேஷ் தப்புர், நவீன் தலால் இருவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது' என்றார்.
கடந்த வாரம் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தில்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பிற்கு உமர் காலித் சென்றிருந்தார். அப்போது, அவரைச் சுட்டுக் கொல்ல முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உமர் காலித் மீதான தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு சில தினங்களில் சமூக ஊடகத்தில் ஒரு விடியோ பதிவு வெளியானது. அதில், "தேசத்துக்கு சுதந்திர தினப் பரிசுதான் இந்தத் தாக்குதல். இந்தத் தாக்குதலுக்காக மற்றவர்களை போலீஸார் துன்புறுத்தக் கூடாது' என்று அதில் பேசிய நபர்கள் கூறினர். 
மேலும், விடியோவில் பேசிய நபர்கள் இருவரும், லூதியாணாவில் உள்ள சரபா கிராமத்தில் உள்ள சீக்கிய புரட்சியாளர் ஷஹீத் கர்த்தர் சிங் சரபா வீட்டில் தாங்கள் சரணடைய உள்ளதாகவும் தெரிவித்திருந்தனர். 
தில்லி காவல்துறையினர் ஹரியாணா மற்றும் பஞ்சாப் போலீஸாருடன் இணைந்து சம்பந்தப்பட்ட நபர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்தனர். கடந்த வெள்ளிக்கிழமை தில்லியிலிருந்து சிறப்பு ஆயுதங்கள் மற்றும் குழுவுடன் 30 போலீஸார் சம்பந்தப்பட்ட இருவரையும் பிடிக்க லூதியாணா சென்றனர். ஆனால், அவர்கள் சரணடையவில்லை. இந்நிலையில், இருவரையும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர். 
உமர் காலித் தாக்கப்பட்ட சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்ட சிசிடிவி காட்சி பதிவுகளைக் கொண்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். உமர் காலித் மற்றும் வழக்கு தொடர்பான இதர சாட்சிகளின் வாக்குமூலத்தை போலீஸார் பதிவு செய்தனர். கொலை முயற்சி வழக்கும் போலீஸார் பதிவு செய்தனர்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி போலீசாரிடம் பாதுகாப்பு அளிக்குமாறு கோரியிருந்ததாகவும், ஆனால், தனக்கு எந்தப் பாதுகாப்பும் போலீஸார் தரப்பில் வழங்கப்படவில்லை என்றும் உமர் தரப்பில் புகார் கூறப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.