8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

கேரளாவுக்கு வெளிநாட்டு நிதியை அனுமதிக்கக் கோரும் மனு தள்ளுபடி

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவின் நிவாரணத்துக்கு வெளிநாட்டு நிதியை பெறும்படி மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி தொடுக்கப்பட்ட மனுவை கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

Published On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவின் நிவாரணத்துக்கு வெளிநாட்டு நிதியை பெறும்படி மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி தொடுக்கப்பட்ட மனுவை கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
மழை வெள்ளத்தால் உருக்குலைந்த கேரளத்துக்கு பல்வேறு வெளி நாடுகளும் நிவாரண நிதியை அறிவித்தன. எனினும், வெளிநாட்டு நிவாரண நிதியை பெறுவதில்லை என்ற கொள்கையை இந்திய அரசு கடைப்பிடிப்பதால், அந்தத் தொகையை மத்திய அரசு பெறவில்லை. இந்நிலையில், கேரள உயர் நீதிமன்றத்தில் அருண் ஜோசப் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், கேரளத்தில் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வெளிநாட்டு நிதியை பெறும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனு, கேரள உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரிஷிகேஷ் ராய், நீதிபதி ஏ.கே. ஜெயசங்கரன் நம்பியார் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறுகையில், "இந்த விவகாரம் மத்திய அரசின் வெளிநாட்டு கொள்கை தொடர்புடையது. ஆதலால் இதில் எங்களால் தலையிட முடியாது. அதேபோல், கேரளத்துக்கு வெளிநாடுகளால் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளதை நிரூபிக்கத் தேவையான ஆதாரம் எதையும் மனுதாரர் தாக்கல் செய்யவும் இல்லை. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்' என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.