தில்லி மெட்ரோ ரயிலின் நான்காவது விரிவாக்கத் திட்டப் பணிகளுக்கு தில்லி அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தில்லி அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து துணை முதல்வர் மணீஷ் சிசோடியா செய்தியாளர்களிடம் கூறியது:
மிக நீண்ட போராட்டத்துக்கு பிறகு, தில்லி மெட்ரோ ரயிலின் 4-ஆவது விரிவாக்கத் திட்ட பணிகளுக்கு தில்லி அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், ரிதாலா - பவானா இடையிலான 21 கி.மீட்டர், மேற்கு ஜனக்புரி - ஆர்.கே. புரம் இடையிலான 28 கி.மீட்டர், இந்திரலோக் - இந்திர பிரஸ்தா இடையிலான 13 கி.மீட்டர், முகுந்த்பூர் - மெளஜ் பூர் இடையிலான 12.5 கி.மீட்டர், ஏரோசிட்டி -துக்ளகாபாத் இடையிலான 20 கி.மீட்டர், லாஜ்பத் நகர் - சாகேத் இடையிலான 8 கி.மீட்டர் என மொத்தம் 104 கி.மீட்டர் அளவுக்கு பணிகள் மேற்கொள்ளப்படும்.
இந்தப் பணிகள் ரூ. 46 ஆயிரம் கோடியில் மேற்கொள்ளப்படவுள்ளன. இதில் தில்லி அரசின் பங்களிப்பு ரூ. 9,700 கோடியாக இருக்கும். இந்தத் திட்டப் பணிகளை 2024-ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
இந்தப் பேட்டியின்போது தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெலாட், அரசின் செய்தித் தொடர்பாளர் நாகேந்திர சர்மா உடனிருந்தனர்.
இது குறித்து தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் தனது சுட்டுரையில், "4-ஆவது கட்ட தில்லி மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ், 6 காரிடர்களுக்கு தில்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 103.93 கி.மீட்டர் தூரம் மேற்கொள்ளவுள்ள இத்திட்டத்தின் கீழ் 79 புதிய மெட்ரே ரயில் நிலையங்கள் கூடுதலாக அமையும்' எனத் தெரிவித்துள்ளார்.
தில்லி மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
இதேபோன்று, முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தனது சுட்டுரையில், "இது தில்லிக்கான மிகவும் மகிழ்ச்சியான செய்தியாகும். கல்வி, சுகாதாரம், மின்சாரம், குடிநீர் விநியோகம் ஆகியவற்றில் புரட்சிகர மாற்றங்களை மேற்கொண்டுள்ளோம். இப்போது போக்குவரத்துத் துறையிலும் மிகப் பெரிய மாற்றம் ஏற்படவுள்ளது. இதனால், காற்று மாசு குறையும். உலகின் மிகச் சிறந்த நகரங்களில் தில்லியும் இடம் பெற வேண்டும் என்பதே எனது கனவாகும். இது குறித்து தில்லியில் வாழும் ஏழைகள், வசதிப்படைத்தவர்கள் பெருமையடைய வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.
இடங்கள் தூரம்
ரிதாலா - பவானா .................................... 21 கி.மீ.
மேற்கு ஜனக்புரி - ஆர்.கே. புரம்.............. 28 கி.மீ.
இந்திரலோக் - இந்திர பிரஸ்தா................ 13 கி.மீ.
முகுந்த்பூர் - மெளஜ் பூர்........................ 12.5 கி.மீ.
ஏரோசிட்டி - துக்ளகாபாத்........................ 20 கி.மீ.
லாஜ்பத் நகர் - சாகேத்................................ 8 கி.மீ.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆலி ராபின்சன், ஜோஷ் டங் வேகத்தில் வீழ்ந்த பாகிஸ்தான்; 171 ரன்களுக்கு ஆட்டமிழப்பு!

உலகில் 3.4 கோடி மருத்துவப் பணியாளர்கள் பற்றாக்குறை! இந்தியாவின் நிலை என்ன?
இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 19 - நேரலை!

முதல்வர் விஜய்யின் அலுவலக அறை ஒப்பந்த முறைகேடு? தமிழக அரசு விளக்கம்
விடியோக்கள்
“பாஜகவின் குழந்தை தவெக”: திமுக மருது அழகுராஜ் விமர்சனம்


