தில்லியில் குளிரின் தாக்கம் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, வீடற்றவர்களுக்காக மேம்பாலங்களுக்கு கீழே தற்காலிக தங்கும் குடில்களை அமைக்க தில்லி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
தில்லியில் குளிரின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களாக குளிர் காற்று வீசி வருகிறது. கடந்த 12 ஆண்டுகளில் எட்டாத அளவாக, குறைந்தபட்ச வெப்பநிலை 3.7 டிகிரி செல்சியஸாக ஞாயிற்றுக்கிழமை பதிவானது. இதைத் தொடர்ந்து தில்லியில் உள்ள வீடற்றவர்கள் குளிரின் தாக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வீடற்றவர்களுக்கு தில்லியில் உள்ள மேம்பாலங்களுக்கு கீழே தற்காலிக தங்கும் குடில்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்கான நடவடிக்கைகளை தில்லி அரசு மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பாக தில்லி அரசு வட்டாரங்கள் கூறுகையில், "தில்லியில் உள்ள வீடற்றவர்களில் பெரும்பாலானோர் தில்லியில் உள்ள மேம்பாலங்களுக்கு கீழே வசித்து வருகின்றனர். தில்லியில் நிலவும் குளிர் காற்றால் அவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து, தில்லியில் உள்ள முக்கிய மேம்பாலங்களுக்கு கீழே, தில்லி அரசால் தற்காலிக தங்கும் குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குடில்களில் வீடற்றவர்கள் இலவசமாகத் தங்கிக் கொள்ளலாம்.
அங்கே, அவர்களுக்கு கம்பளி, போர்வை, ஹீட்டர் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன' என்று தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








