
இந்தியாவுடன் பேச்சு நடத்த தயார்: பாகிஸ்தான்
இரு தரப்பு பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். இதுதொடர்பாக இந்தியாவின் பதிலுக்காக காத்திருக்கிறோம் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இரு தரப்பு பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். இதுதொடர்பாக இந்தியாவின் பதிலுக்காக காத்திருக்கிறோம் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை ஒன்றே தீர்வு என நீண்ட காலமாக வலியுறுத்தி வருவதாகவும் அந்நாடு கூறியுள்ளது.
இதுதொடர்பாக, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் முகம்மது பைசல், இஸ்லாமாபாதில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்களின் நிலைப்பாடு குறித்து சர்வதேச சமூகத்துக்கு தெரிவித்து விட்டோம். இதுதொடர்பாக இந்தியாதான் பதில் அளிக்க வேண்டும்.
பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதர் அஜய் பிஸாரியா, அண்மையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு அரசியலுக்கான கதவுகளை திறந்து வைத்துள்ளதால் இந்தியாவுக்கு நம்பிக்கை பிறந்துள்ளது என்று கூறியிருந்தார்.
நாங்களும் அதேபோன்று நாம் எப்படி முன்னோக்கிச் செல்லலாம் என்பது குறித்து திட்டமிட்டு வருகிறோம்.
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை ஒன்றே தீர்வாக அமையும் என்பதை நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறோம்.
அடுத்தக்கட்டமாக என்ன நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என்பது குறித்து இந்தியாவின் பதிலுக்காக நாங்கள் அலுவல்பூர்வமாக காத்திருக்கிறோம்.
அமெரிக்கா - இந்தியாவுக்கு எதிர்ப்பு: இந்தியா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் கூட்டறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள தேவையற்ற குற்றச்சாட்டுகளுக்கு நாங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளோம்.
இதுதொடர்பான எங்களது நிலைப்பாட்டை அமெரிக்காவுக்கு தெரிவித்து விட்டோம் என்றார் பைசல்.
இந்தியா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் அண்மையில் தில்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், தமது எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் பயங்கரவாத செயல்கள் நடைபெறாமல் இருப்பதை பாகிஸ்தான் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.
மும்பையில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று 10 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீதும், பதான்கோட், உரி போன்ற இடங்களில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் மீதும் பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





