கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

இரட்டை இலைச் சின்னம் வழக்கு: குறுக்கு விசாரணை தேவையில்லை:  உயர் நீதிமன்றத்தில் செம்மலை தரப்பு வாதம்

"இரட்டை இலைச் சின்னம் விவகாரத்தில் குறுக்கு விசாரணை நடத்தத் தேவையில்லை' என்று தில்லி உயர் நீதிமன்றத்தில்

Published On :

"இரட்டை இலைச் சின்னம் விவகாரத்தில் குறுக்கு விசாரணை நடத்தத் தேவையில்லை' என்று தில்லி உயர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது செம்மலை தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரின் அணிக்கு இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு நவம்பர் 23-இல் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக டி.டி.வி. தினகரன், வி.கே. சசிகலா ஆகியோர் சார்பில் தில்லி உயர் நீதிமன்றத்தில் தனித் தனியாக மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது. அந்த உத்தரவை செல்லாதென அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 
இது தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் தற்போது தில்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு தில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிஸ்தானி, சங்கீதா தீங்க்ரா ஷெகல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செம்மலை சார்பில் வழக்குரைஞர் கே.வி. விஸ்வநாதன் ஆஜராகி புதன்கிழமை வாதங்களை முன்வைத்தார். அதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணை வியாழக்கிழமை நடைபெறும் என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். அதன்படி, வியாழக்கிழமை பிற்பகலில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
 அப்போது, செம்மலை சார்பில் வழக்குரைஞர் கே.வி. விஸ்வநாதன் ஆஜராகி, "தேர்தல் ஆணையத்தில் எங்கள் தரப்பினர் போலி ஆவணங்களைத் தாக்கல் செய்ததாக எதிர்த் தரப்பினர் குற்றம்சாட்டினர். மேலும், இது தொடர்பாக குறுக்கு விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோருகின்றனர். போலி ஆவணம் தாக்கல் செய்யப்பட்டது என்கிற எதிர்த் தரப்பினரின் குற்றச்சாட்டு பொய்யானது. நீதிமன்றத்தில்தான் சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்தப்படுவது வழக்கம். இதுபோல தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரங்கள் தாக்கலுக்கு குறுக்கு விசாரணை நடத்தப்படுவது இல்லை. குறுக்கு விசாரணை தேவையும் இல்லை. எல்லா சட்டப் பிரிவுகளையும் பரிசீலித்த பிறகே எங்கள் தரப்புக்கு இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கப்பட்டது' என்று வாதிட்டார். இந்த வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை செப்டம்பர் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.