சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

"ராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட  பாரத ரத்னா விருதை திரும்பப் பெற வேண்டும்'

சீக்கிய படுகொலைகளில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு தொடர்புள்ளதாகக் கூறி அவருக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா

Published On :30 ஜனவரி 2024, 10:15 pm IST

சீக்கிய படுகொலைகளில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு தொடர்புள்ளதாகக் கூறி அவருக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்பப் பெற வேண்டும் என தில்லி பாஜக செய்தித் தொடர்பாளர் தஜீந்தர் பால் சிங் பாகா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தில்லியில் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி: சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை காங்கிரஸ் தலைவர்கள் ஜக்தீஷ் டைட்லர், சஜன்குமார், முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் எச்.கே.எல். பகத், நாடாளுமன்ற உறுப்பினர் தரம்தாஸ் சாஸ்திரி, லலித் மக்கான் ஆகியோரே ஒருங்கிணைத்து நடத்தியதாக விசாரணைக் கமிஷன் தெரிவித்துள்ளது. இவர்கள் ராஜீவ் காந்தியின் ஆதரவுடனேயே சீக்கியர்கள் மீது தாக்குதல்களை நடத்தினார்கள். 
இந்திரா காந்தி கொலையுண்டு, 2 வாரங்களுக்குப் பிறகு, தில்லி போட் கிளப்பில் உரையாற்றிய ராஜீவ் காந்தி, "மக்கள் கோபத்தில் உள்ளனர். மிகப்பெரிய விருட்சம் ஒன்று பெயர்ந்து விழும் பொழுது அந்த நிலம் சற்று அதிரவே செய்யும்' என்று சீக்கியப் படுகொலைகளை நியாயப்படுத்திப் பேசினார்.அவர் தன்னுடைய பதவிக் காலத்தில், சீக்கியப் படுகொலைக்காக மனம் வருந்தவும் இல்லை. மன்னிப்புக் கோரவும் இல்லை. நவீன இந்தியாவில் கும்பல் படுகொலையின் தந்தையான ரஜீவ் காந்திக்கு இந்தியாவின் உயர் விருதான பாரத ரத்னாவை வழங்கியது நியாயமற்றது. அவருக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை உடனடியாகத் திரும்ப பெற வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.