
தில்லியைப் போல் ஹரியாணாவிலும் குறைந்த கட்டணத்தில் மின்சாரம்: முதல்வர் கேஜரிவால் வலியுறுத்தல்
தில்லியில் உள்ளது போல ஹரியாணாவிலும் குறைவான கட்டணத்தில் மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வலியுறுத்தியுள்ளார்.
தில்லியில் உள்ளது போல ஹரியாணாவிலும் குறைவான கட்டணத்தில் மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வலியுறுத்தியுள்ளார்.
வீடுகளுக்கான மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும் என்று ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டர் செவ்வாய்க்கிழமை அறிவித்திருந்தார்.
இந்நிலையில், தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் இவ்வாறு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்பதிவில் தெரிவித்திருப்பதாவது:
மனோகர் லால் கட்டர் சாஹிப் ஹரியாணாவில் மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும் என அறிவித்துள்ளார். ஆனால், இந்தக் குறைப்பு போதுமானதாக இல்லை. தில்லியில் இருப்பது போன்று ஹரியாணாவிலும் குறைவான கட்டணத்தில் மின்சாரம் வழங்கப்பட வேண்டும்.
ஹரியாணாவின் பல கிராமங்களிலும் மின்சார விநியோகத்தில் தட்டுப்பாடு இருப்பதாகக் கூறப்படுகிறது. அதனால் மாநிலத்தின் அனைத்து கிராமங்களிலும் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்க ஹரியாணா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.
ஹரியாணாவில் புதிதாக நிர்ணயிக்கப்பட்டுள்ள வீடுகளுக்கான மின்சாரக் கட்டணத்தின்படி, 200 யூனிட் வரையிலான நுகர்வுக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.2.50 வசூலிக்கப்பட உள்ளது. இதற்கு முன்பு இந்தக் கட்டணம் ரூ.4.50 ஆக இருந்தது. ஹரியாணாவில் 2019-இல் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட மும்முரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






