ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

"தூய்மையே உண்மையான சேவை': மோடியின் புதிய திட்டம்

மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு வரும் 15-ஆம் தேதி முதல் "தூய்மையே உண்மையான சேவை' என்ற இயக்கம்

Published On :

மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு வரும் 15-ஆம் தேதி முதல் "தூய்மையே உண்மையான சேவை' என்ற இயக்கம் செயல்படுத்தப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்டுள்ள விடியோ பதிவில் கூறியுள்ளதாவது: "தூய்மையே உண்மையான சேவை' இயக்கம் தொடங்கிய பிறகு, தூய்மை இந்தியா திட்டத்தில் சிரத்தையோடு களத்தில் இறங்கி பணியாற்றியவர்களுடன் கலந்துரையாட ஆர்வத்துடன் உள்ளேன். "தூய்மையே உண்மையான சேவை' இயக்கமானது, மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்த ஓர் சிறந்த வழியாகும்.
வரும் அக்டோபர் 2-ஆம் தேதி மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த தினம் கொண்டாடப்படும்போது, தூய்மை இந்தியா திட்டம் தொடங்கி 4 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும்.
தூய்மை இந்தியா என்ற அந்த மிகப்பெரிய இயக்கமானது, "சுத்தமான இந்தியா' என்ற காந்தியின் கனவை நனவாக்குவதை இலக்காகக் கொண்டதாகும் என்று பிரதமர் மோடி அந்த விடியோ பதிவில் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.