முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

ராகுல் காந்தி ஒரு மன நோயாளி:  இளைஞர் பாஜக தலைவர்

பிரதமர் ஆவதற்கு கனவு காணும் ராகுல் காந்தி ஒரு மன நோயாளி என்று பாஜக இளைஞர் அமைப்பான "பாரதிய ஜனதா

Published On :

பிரதமர் ஆவதற்கு கனவு காணும் ராகுல் காந்தி ஒரு மன நோயாளி என்று பாஜக இளைஞர் அமைப்பான "பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா'வின் தேசிய செயலர் அபிஜாத் மிஸ்ரா விமர்சித்துள்ளார்.
குஜராத் மாநிலம் ஆமதாபாதில் கட்சித் தொண்டர்களிடையே அவர் உரையாற்றியதாவது: 
ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக இருக்கும் வரையில் பாஜக கவலைப்படத் தேவையில்லை. அவரை கட்சியின் தலைவராக்கியதற்காக காங்கிரஸுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ராகுல் காந்தி, பிரதமர் மோடியுடன் போட்டிபோட விரும்புகிறார். ஒரு மன நோயாளி, வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர், பிரதமர் ஆகும் கனவுடன் இருக்கிறார். ஒரு சிறிய பானையில் வளரும் செடி போல இருக்கும் சிலர், ஆலமரமாக வளர நினைக்கின்றனர். அத்தகைய முட்டாள்கள் பிரதமராக விரும்புகின்றனர்.
இன்றைய இளைஞர்கள், ஷாருக் கான், சல்மான் கான், ஆமிர் கான் போன்ற பாலிவுட் நடிகர்களை தங்களது முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளாமல், மகாராணா பிரதாப், சிவாஜி, சந்திரசேகர் ஆஸாத், ராம்பிரசாத் பிஸ்மில், மங்கள் பாண்டே, குரு கோவிந்த் சிங் ஆகியோரை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும்.
ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தை மையமாகக் கொண்டுள்ள "விடுதலை முழக்க கும்பல்', நாட்டிற்கான மிகப்பெரிய சவாலாகும். அவர்கள் சில வேளைகளில் காஷ்மீருக்கு சுதந்திரம் கேட்டு போராடுகின்றனர். அந்தக் குழுவுடனோ, மாவோயிஸ்டுகளுடனோ தொடர்புடையவர்கள் நமக்கான முன்மாதிரியாக இருக்க இயலாது என்று அபிஜாத் மிஸ்ரா உரையாற்றினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.