தில்லி கரோல் பாக்கில் உள்ள அப்ரித் பேலஸ் ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில், மியான்மர் நாட்டைச் சேர்ந்த புத்த மத யாத்ரீகர்கள் மூவர் உயிரிழந்துள்ளனர். மூவரும் அடையாளம் காணப்பட்டு, அவர்களது உடலை அந்த நாட்டில் உள்ள குடும்பத்தினரிடம் ஒப்படைக்க மியான்மர் தூதரகம் ஏற்பாடு செய்துள்ளது.
அவர்களுக்கு சுற்றுலா வழிகாட்டியாக வந்திருந்த பெண் சென் சென் (33), விபத்தின் போது இரண்டாவது தளத்தில் இருந்து குதித்து தப்பினார். இருப்பினும், பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர்கள் அனைவரும் தில்லியிலிருந்து வாராணசிக்கு செல்லவிருந்த நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இது தொடர்பாக தில்லியில் உள்ள மியான்மர் தூதரக அதிகாரிகள் கூறியதாவது: மியான்மரிலிருந்து புத்த மத யாத்ரீகர்கள் இந்தியாவுக்கு சுற்றுலா வந்திருந்தனர். அவர்களுக்கு வழிகாட்டியாக சான் சான் (33) என்ற பெண்ணும் வந்திருந்தார். அவர்கள் அனைவரும் தில்லி கரோல் பாக்கில் உள்ள அம்ரித் பேலஸ் ஹோட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தனர். அவர்களுடன் பிகார் மாநிலம், புத்த கயாவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரும் தங்கியிருந்தார்.
இந்நிலையில், இந்த ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை காலையில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது ஹோட்டலில் தங்கியிருந்த மியான்மர் புத்த யாத்ரீகர்களும் சிக்கினர். அவர்கள் புத்த கயாவிலிருந்து தில்லிக்கு வந்திருக்கின்றனர்.
மியான்மர் நாட்டில் உள்ள திகெக்கிய் டவுன்ஸிப்பை சேர்ந்த முதியவர் டாவ் ஹலா மே (66) என்பவரும், டாவ் மியா ஹிட்வே (44) என்பவரும் ஏற்கெனவே தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இந்நிலையில், பலத்த காயமடைந்து லேடி ஹார்டிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மியான்மரைச் சேர்ந்த ஹிதும்ஹ்லா சியன் (32) என்ற இளைஞரும் உயிரிழந்தார். இவர்களுடன் தங்கியிருந்த பிகாரை சேர்ந்த புகைப்படக் கலைஞரும் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
மேலும், விபத்தில் தப்பிய மியான்மர் புத்த யாத்ரீகர்கள் 4 பேரும் கரோல் பாக் பகுதியில் உள்ள மற்றொரு ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்கான உதவிகளை மியான்மர் துறவிகள் செய்து வருகின்றனர். இதற்கிடையே, இந்த விபத்தில் உயிரிழந்த மியான்மர் புத்த மத யாத்ரீகளின் உடல்களை அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைப்பதற்கு மியான்மர் தூதரகம் அனைத்து நடமுறைகளையும் மேற்கொண்டு வருகிறது.
இருவரை 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க உத்தரவு
கரோல் பாக்கில் உள்ள தனியார் ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவரை இரண்டு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதற்கு தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக தீ விபத்து ஏற்பட்ட அப்ரித் பேலஸ் ஹோட்டலின் பொது மேலாளர் ராஜேந்தர், மேலாளர் விகாஷ் ஆகிய இருவரை தில்லி போலீஸார் கைது செய்துள்ளனர். ஹோட்டலின் உரிமையாளர் ஷர்தேந்து கோயல் தலைமறைவாகிவிட்டார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட இருவரும் தில்லி பெருநகர நீதிமன்றத்தின் நீதிபதி ஷில்பி ஜெயின் முன் புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவின் விவரம்:
இந்த தீ விபத்து சம்பவ விசாரணைக்கு தேவையான முக்கிய ஆவணங்களைப் பெறுவதற்காக கைது செய்யப்பட்டுள்ள இருவரை பிப்ரவரி 15ஆம் தேதி வரை இரண்டு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. அவர்களை போலீஸார் துன்புறுத்தக் கூடாது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆளுங்கட்சியைவிட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகம்: மு.க. ஸ்டாலின்
மந்திரி பதவிக்காக த.வெ.க.விடம் மண்டியிட்டு... சி.வி. சண்முகம் தரப்புக்கு எதிராக அதிமுக அறிக்கை!

ஏழு முதல்வர்களுடன் நடித்த ஒரே நடிகை!

காமாக்யா தேவி கோயிலில் என்டிஏ தலைவர்கள் வழிபாடு!
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
