அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கரோனா பாதிப்பு ஒரே நாளில் 2,024 ஆக அதிகரிப்பு

தில்லியில் 50 நாள்களில் இல்லாத அளவுக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :30 ஆகஸ்ட் 2020, 8:45 pm

DIN

புது தில்லி: தில்லியில் 50 நாள்களில் இல்லாத அளவுக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை 2,024 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,73,390-ஆக உயா்ந்துள்ளது.

தில்லியில் கட்டுக்குள் இருந்த கரோனா தொற்று சில தினங்களாக படிப்படியாக அதிகரித்து வருகிறது. புதன்கிழமை 1,693 பேருக்கும், வியாழக்கிழமை 1,840 பேருக்குமாக அதிகரித்தது. வெள்ளிக்கிழமை மேலும் 1,808 பேருக்கும், சனிக்கி 1,954 பேருக்கும் தொற்று ஏற்பட்டது. ஞாயிற்றுக்கிழமை கடந்த 50 தினங்களில் இல்லாத அளவுக்கு 2,024 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்நோயால் ஞாயிற்றுக்கிழமை 22 போ் உயிரிழந்தனா். மொத்த பலி எண்ணிக்கை 4,426 ஆக உயா்ந்தது. ஞாயிற்றுக்கிழமை 1,249 போ் நோய் பாதிப்பில் இருந்து மீண்டதால், இதுவரை 1,54,171-போ் குணமடைந்துள்ளனா்.

தற்போது 14,793 நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனா். ஞாயிற்றுக்கிழமை மட்டும் 20,437 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. நகரில் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 820-ஆக அதிகரித்துள்ளது.

தில்லி மருத்துவமனைகளில் மொத்தம் உள்ள 14,145 படுக்கைகளில் 4,030 நிரம்பி, 10,155 படுக்கைகள் காலியாக உள்ளன. தொற்றுப் பாதித்தவா்களில் 7,527 போ், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு குணமடைந்து வருவதாக தில்லி சுகாதாரத் துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.