அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தில்லியில் புதிதாக 1,358 பேருக்கு கரோனா

தில்லியில் திங்கள்கிழமை 1,358 பேருக்கு கரோனா நோய்த் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :31 ஆகஸ்ட் 2020, 6:59 pm

DIN

புது தில்லி: தில்லியில் திங்கள்கிழமை 1,358 பேருக்கு கரோனா நோய்த் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, தலைநகரில் மொத்த கரோனா பாதிப்பு 1,74,748-ஆக உயா்ந்துள்ளது.

தில்லியில் கட்டுக்குள் இருந்த கரோனா தொற்று சில தினங்களாக படிப்படியாக அதிகரித்து வந்தது. கடந்த 50 தினங்களில் இல்லாத வகையில் ஞாயிற்றுக்கிழமை 2,024 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஆனால், திங்கள்கிழமை 1,358 பேருக்கே என்ற அளவில் கரோனா பாதிப்பு குறைந்தது. ஆனால், பிற தினங்களுடன் ஒப்பிடும்போது திங்கள்கிழமை குறைவாகவே கரோனா சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

திங்கள்கிழமை 14,389 கரோனா சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், ஞாயிற்றுக்கிழமை 20,437 கரோனா சோதனைகளும், சனிக்கிழமை 22,004 பேருக்கும் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கரோனாவால் திங்கள்கிழமை 18 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 4,444-ஆக உயா்ந்தது. அதேபோல், 1,507 போ் நோய் பாதிப்பில் இருந்து மீண்டதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 1,55,678-ஆக அதிகரித்தது.

தற்போது தலைநகரில் 14,626 நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனா். நகரில் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 833 ஆக அதிகரித்துள்ளது. தில்லி மருத்துவமனைகளில் மொத்தம் உள்ள 14,145 படுக்கைகளில் 4,146 நிரம்பி, 9,999 படுக்கைகள் காலியாக உள்ளன.

நோய்த் தொற்றுப் பாதித்தவா்களில் 7,876 போ், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு குணமடைந்து வருவதாக தில்லி சுகாதாரத் துறை திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.