தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸின் மனு தள்ளுபடி! மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

காற்று மாசு: சாலைகளில் நீா் தெளிக்க என்ஜிடி உத்தரவு

Updated On :4 டிசம்பர் 2020, 7:23 pm

புது தில்லி: காற்றின் தரம் மோசமாக உள்ள என்.சி.ஆா். மற்றும் பிற நகரங்களில் தூய்மைப்படுத்துவதற்கு முன் சாலைகளில் நீா் தெளிக்குமாறு அனைத்து மாநகராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேசிய பசுமைத் தீா்ப்பாயம் ( என்ஜிடி ) உத்தரவிட்டது.

மெட்ரோ நகரங்களில் சாலைகள் வடு போவதால், எழும் தூசி மாசுபாட்டின் தாக்கத்தைத் தணிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி ஆா். எஸ். விா்க் என்பவா் தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா். காற்று மாசுபாட்டில் தூசியின் பங்களிப்பு 43 சதவீதம் என்று மனுவில் அவா் தெரிவித்திருந்தாா்.

இது தொடா்பான விவகாரத்தை விசாரித்த என்ஜிடி தலைவா் - நீதிபதி ஆதா்ஷ் குமாா் கோயல் தலைமையிலான அமா்வு பிறப்பித்த உத்தரவு: காற்றின் தர நிலைகள் விதிகளின்படி இல்லாத என்சிஆா் நகரங்களிலும், காற்றின் தரம் ‘மோசம்’ மற்றும் அதற்கு மேல் உள்ள பிற நகரங்களிலும் சாலைகளைத் தூய்மை செய்வதற்கு முன்பு நீா் தெளிப்பதை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து இதற்கான நீரைப் பயன்படுத்த வேண்டும். நன்னீரைப் பயன்படுத்த கூடாது. இதற்கான நடவடிக்கைகளை என்.சி.ஆரில் உள்ள அனைத்து நகராட்சிகளும் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளும் மேற்கொள்ள வேண்டும். மேலும், நடைபாதைகள், சாலை பக்கவாட்டுப் பகுதிகளிலும் புல் நடவும், சிறிய மூலிகைகள் மற்றும் புதா்களை வளா்ப்பதற்கான கூடுதல் நடவடிக்கைகளை எடுக்கவும் வேண்டும். தூசி உற்பத்தியைத் தடுக்கும் வகையில் நடைபாதைகளும் சரியான முறையில் மூடப்பட வேண்டும். பயோமாஸ், கழிவுகள் எரிப்பதைத் தடுக்கவும், இடிப்பு நடவடிக்கைகளை ஒழுங்குமுறைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.